OTT யில் வந்துள்ள டாப் 10 படங்கள் தவறாமல் பாருங்கள்.

HIGHLIGHTS

ஒரு படம் வெளியான உடனேயே அதை தியேட்டரில் போய் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை வரும். அது தான் புதுப்படங்களுக்கு கிடைக்கும் மரியாதை. ஆனால் சமீப காலமாக அந்த ட்ரெண்ட் முற்றிலும் மாறிவிட்டது

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டனர். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இன்று கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே ஓடிடியில் வெளியாவது வளமான ஒன்றாகி விட்டது

ஒரு படம் வெளியான உடனேயே அதை தியேட்டரில் போய் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை வரும். அது தான் புதுப்படங்களுக்கு கிடைக்கும் மரியாதை. ஆனால் சமீப காலமாக அந்த ட்ரெண்ட் முற்றிலும் மாறிவிட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் திரையரங்கில் சென்று பார்க்க இயலாது என்பதால் படங்களை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டனர். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இன்று கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே ஓடிடியில் வெளியாவது வளமான ஒன்றாகி விட்டது. 

Chhichhore – சிச்சோரை : அனிருத் என்ற நடுத்தர வயது மனிதனின் கதை. இதில் அனிருத் கேரக்டரில் மறைந்த நடிகர் சுஷந்த் சிங் நடித்திருப்பார். இந்தப் படம் உங்கள் கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும்

Mission Mangal – மிஷன் மங்கல் : விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான சூப்பர் ஹிட் திரைப்படம். செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பும் ப்ராஜெக்டை அட்டகாசமான நடிப்பால் நம் கண் முன்னே நிறுத்தியிருப்பார்கள்.

M.S. Dhoni – The Untold Story : தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படம். தோனி கேரக்டரில் சுஷந்த் சிங் ராஜ்புத் நடித்திருப்பார். ரயில்வேயில் பார்த்தது முதல் இந்திய அணிக்காக உலக கோப்பை வென்றது வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்

Bhool Bhulaiyaa : ஆக்சன் காட்சிகளுக்கு பெயர்போன அக்சய் குமார் இந்த படத்தில் காமெடியில் பின்னி எடுத்திருப்பார். ஹாட்ஸ்டாரில் இடம்பெற்ற மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பாராட்டப்படுகிறது.

83 : 1983-இல் இந்திய அணி முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகக்கோப்பையை வென்றது. அதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

Tarak : கன்னட மொழயில் உருவான இந்தப் படத்தில், இந்தியாவில் தனது பெற்றோர் உயிரிழந்த தகவல் அறிந்து கதாநாயகன் அங்கு திரும்புகிறார். அதன்பின் நடக்கும் திருப்பங்கள், காதல் என படம் சுவாரசியமாக நகரும்.

Hridayam மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் இந்தியா முழுக்க வரவேற்பை பெற்றது. கல்லூரி நினைவுகளை மீண்டும் மனதில் நிறுத்தச் செய்யும் படம்.

Badaai Ho கதாநாயகனின் வயதான தாய் மீண்டும் தாய்மை அடைகிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாக திரையில் விரிகிறது.

Bhajrangi Bhaijaan பாகிஸ்தானை சேர்ந்த பேச முடியாத சிறுமி இந்தியாவில் தொலைந்து விடுகிறார். அவரை சல்மான் கான் எப்படி மீட்டு சிறுமியின் குடும்பத்தாருடன் ஒப்படைக்கிறார் என்பதே படத்தின் கதை.

Bala வழுக்கைத் தலையால் கதாநாயகனுக்கு ஏற்படும் சமூக நெருக்கடி, திருமணத்திற்கு ஏற்படும் தடைகள் உள்ளிட்டவை சுவாரசியமாக அமைந்த படம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :