நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள தலைவர் 169 படத்தின் பெயர் அறிவிப்பு.

HIGHLIGHTS

ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும்

நெல்சன் திலிப்குமார்  இயக்கியுள்ள தலைவர் 169 படத்தின் பெயர் அறிவிப்பு.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதமாக மாறியிருந்தது. இருந்தும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும், மேலும் இது இரண்டு நீட்டிக்கப்பட்ட ஷெட்யூல்களாக இருக்கும். படத்தின் பெரும்பகுதி சென்னையில் படமாக்கப்படவுள்ளது, மேலும் படத்தின் முதல் பாதிக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை இயக்குனர் முடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தின் நடிகர்களுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயிரடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile