வோடபோன் தீபாவளி ஆபர் 10 ஜி.பி.டேட்டா 168 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது..!

HIGHLIGHTS

புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS மற்றும் 10 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.

வோடபோன்  தீபாவளி ஆபர் 10 ஜி.பி.டேட்டா 168 நாட்கள் வேலிடிட்டியுடன்  வழங்குகிறது..!

வோடபோன் தீபாவளி சலுகையில்  நிறுவனம் பிரீபெயிட் பயனர்களுக்கு நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.597 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS  மற்றும் 10 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் 168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த சலுகையின் வேலிடிட்டி 112 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய சலுகை அதிகளவு டேட்டா பயன்படுத்தாத ஃபீச்சர் போன் பயனர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வோடபோன் புதிய சலுகை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிய வோடபோன் சலுகை ஏர்டெல் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை இந்தியா முழுக்க வழங்குகிறது.

எனினும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் தினமும் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே வாய்ஸ் கால் பேச முடியும். வாரம் முழுக்க வாய்ஸ் கால் பேசும் அளவு 16.6 மணி நேரங்கள் ஆகும். புதிய வோடபோன் சலுகை நாடு முழுக்க வோடபோன் 4ஜி சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று ஏர்டெல் வழங்கும் சலுகை வாய்ஸ் கால் பேச எவ்வித லிமிட்டும் வழங்கவிவில்லை , மேலும் வேலிடிட்டி காலம் 168 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile