VODAFONE IDEA (VI) வின் டபுள் டேட்டா தமக்கா ஆபர் இந்த மூன்று திட்டங்களில் கிடைக்கும்.

Updated on 05-Feb-2021
HIGHLIGHTS

வோடபோன் ஐடியா (Vi) தனது வாடிக்கையாளர்களுக்கு இரட்டை டேட்டா நன்மைகளை வழங்கும் ஒரே தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆகும்.

VI ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

தினமும் 4 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும்

பணத்தை செலவழிக்காமல் அதிகமான டேட்டா கிடைக்கிறது  என்றால் இலவச டேட்டாவை யார் விரும்பவில்லை? ஜியோ குறைந்த விலைக்கு அதிக டேட்டாக்களை வழங்கும் போக்கைத் தொடங்கியது, இது இந்திய தொலைத் தொடர்புத் துறையை அதிக போட்டிக்கு உட்படுத்தியது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில், இந்த வோடபோன் ஐடியா (Vi) தனது வாடிக்கையாளர்களுக்கு இரட்டை டேட்டா நன்மைகளை வழங்கும் ஒரே தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆகும். இந்த சலுகை நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு திட்டங்களை வழங்கிவருகிறது  நிறுவனத்தில் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன, அவை இரட்டை டேட்டவை வழங்குகின்றன 

அந்தவகையில் குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் வழக்கத்தை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி வைத்தது. எனினும், இந்த ஆண்டு இருமடங்கு டேட்டா பலன் வழங்கும் ஒற்றை நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது

இந்த நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகைகளில் தேர்வு செய்யப்பட்ட மூன்று சலுகைகளுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது வி ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த மூன்று சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் புது சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தினமும் 4 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். கூடுதல் டேட்டா தவிர மூன்று சலுகை பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

வி ரூ. 299 சலுகை பலன்களை பொருத்தவரை தினமும் 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் , தினமும் 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி ஆப் பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 449 சலுகையில் இதே பலன்கள் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 699 வி சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :