Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான தகவல், விலை உயர்வுக்கு திட்டம்.

HIGHLIGHTS

வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

வியாபாரத்தில் தொடர் இழப்பை சரி செய்யும் முயற்சியாக விலை உயர்வை அமல்படுத்த வி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது

Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு  அதிர்ச்சியான தகவல், விலை உயர்வுக்கு திட்டம்.

வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய விலை உயர்வு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
 
வியாபாரத்தில் தொடர் இழப்பை சரி செய்யும் முயற்சியாக விலை உயர்வை அமல்படுத்த வி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்று சலுகை விலையை உயர்த்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த விலை உயர்வு டிசம்பர் மாத வாக்கில் அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. விலை உயர்வு அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கலாம் என அந்நிறுவன வட்டாரங்கள் கூறினாலும், இவ்வாறு அமல்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் என்றும் கூறப்படுகிறது. 

எனினும், இரு நிறுவனங்களும் ஜியோ சலுகை கட்டணங்களுக்கு போட்டியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்கும் முன் வி நிறுவனம் விலை உயர்வு பற்றி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile