Unlimited Data
இந்தியாவின் மூன்றாவ து மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea(VI) தங்களின் கஸ்டமர்களுக்கு ரூ,400க்குள் வரும் பல ப்ரீபெய்ட் திட்டட்ன்களை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது உங்களுக்கு Superhero பிரிவின் கீழ் வழங்கப்படும், இந்த செக்ஷனின் கீழ் கஸ்டமர்கள் அதிகபட்சமான 5G டேட்டா மற்றும் பல நன்மைகள் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் கீழ் மூன்று நிறுவனம் வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,365, ரூ,379 மற்றும் ரூ, 399 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
வோடஃபோன் ஐடியா ரூ.365 திட்டம் என்பது பயனர்களுக்குக் கிடைக்கும் மிகவும் மலிவான சூப்பர்ஹீரோ திட்டமாகும். இந்தத் திட்டம் 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலம், வரம்பற்ற வாய்ஸ் காலிங், தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இதன் மூலம், பயனர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டா, அரை நாள் (நள்ளிரவு 12 மணி முதல் இரவு 12 மணி வரை) இலவச வரம்பற்ற டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரையிலான பேக்கப் டேட்டா ஆகியவற்றை எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றிப் பெறுகிறார்கள்.
இதையும் படிங்க:ரூ,550க்குள் வரும் இந்த Airtel திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டி பல நன்மை
வோடஃபோன் ஐடியா ரூ.379 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. பயனர்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அரை நாள் (நள்ளிரவு 12 மணி முதல் இரவு 12 மணி வரை) இலவச அன்லிமிடெட் டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரையிலான பேக்கப் டேட்டா ஆகியவற்றை எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றிப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் ஒரு மாதம் ஆகும்.
வோடஃபோன் ஐடியா ரூ.399 திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது, மேலும் இதன் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்தின் கூடுதல் பலன்கள் – அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அரை நாள் (நள்ளிரவு 12 மணி முதல் இரவு 12 மணி வரை) இலவச வரம்பற்ற டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டணமின்றி 2ஜிபி வரை பேக்கப் டேட்டா ஆகியவை ஆகும். மேலும், இந்தத் திட்டத்துடன் ஒரு மாதத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் இலவச அணுகலும் இணைக்கப்பட்டுள்ளது.