365 நாட்கள் நீடிக்கக்கூடிய Vodafone Idea அசத்தலான பிளான் கூடுதலாக 75GB டேட்டா கிடைக்கும்.
Vi அதாவது Vodafone Idea அதன் இரண்டு திட்டங்களை மிகவும் பிரபலமாக்கியுள்ளது
இதில் ஒன்று ரூ.1,449, மற்றொன்று ரூ.2,889. இவற்றில் பல நன்மைகள் வழங்கப்பட்டு வருகின்றன
365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. எனவே இந்தத் திட்டத்தின் விவரங்களைப் பார்ப்போம்
நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் Vi அதாவது Vodafone Idea அதன் இரண்டு திட்டங்களை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. இதில் ஒன்று ரூ.1,449, மற்றொன்று ரூ.2,889. இவற்றில் பல நன்மைகள் வழங்கப்பட்டு வருகின்றன, இதில் டேட்டா, அழைப்பு உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. இந்த திட்டத்தில் பயனர்கள் அதிகம் விரும்புவது 75 ஜிபி டேட்டா. இவற்றில் ஒன்று 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, மற்றொன்று 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. எனவே இந்தத் திட்டத்தின் விவரங்களைப் பார்ப்போம்.
Surveyரூ. 1449 மற்றும் ரூ. 2,889 விலையில் கிடைக்கும் இரண்டு சலுகைகளும் தற்போது அதிக பலன்களை வழங்குகிறது. இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வி முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே இந்த சலுகைகள் வி ஹீரோ அன்லிமிடெட் பலன்களுடன் கிடைக்கின்றன.
இந்த நிலையில், கூடுதல் டேட்டாவும் சேர்க்கும் பட்சத்தில் இந்த சலுகை மேலும் வலுவானதாக மாறி இருக்கிறது. இத்துடன் இந்த இரு சலுகைகளும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்குவதோடு, நீண்ட நாள் வேலிடிட்டியும் வழங்கி வருகின்றன.
மாற்றப்பட்ட பலன்கள்:
வி ரூ. 1449 மற்றும் ரூ. 2889 பிரீபெயிட் சலுகைகள் தற்போது 75 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன. தற்போது இந்த கூடுதல் டேட்டா பயனர் அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு விடும்.
வி ரூ. 1449 சலுகை ஆறு மாதங்கள் அல்லது 180 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இது தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் போன்ற சேவைகளை வழங்குகிறது. இத்துடன் 50 ஜிபி கூடுதல் டேட்டாவும் இதே சலுகையில் வழங்கப்படுகிறது.
ரூ. 2889 வி சலுகையில் முந்தைய ரூ. 1449 வழங்கியதை போன்ற பலன்களே கிடைக்கிறது. எனினும், இந்த சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் இந்த சலுகை 75 ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற்று இருக்கிறது.
இது மட்டுமின்றி வி பிரீபெயிட் சலுகைகளில் வி ஹீரோ அன்லிமிடெட் ஆஃபர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது வீக்எண்ட் டேட்டா ரோல் ஓவர், டேட்டா டிலைட், பின்ஜ் ஆல் நைட் போன்று ஏராளமான பலன்களை வழங்குகிறது. வீக்எண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகையில் பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பின்ஜ் ஆல் நைட் சலுகை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா டிலைட்ஸ் சலுகை ஒவ்வொரு மாதமும் அவசர கால பயன்பாட்டிற்காக 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
