புத்தம் புதிய ஆபருடன் Vodafone IDEA இதுவரை கண்டிராத அசத்தும் சலுகை,

Updated on 13-Dec-2020
HIGHLIGHTS

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 948 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது

அன்லிமிட்டெட் டேட்டாவும், இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது

ரூ. 699 சலுகையின் வேறுப்பட்ட சலுகை ஆகும். புதிய ரூ. 948 சலுகையினை இருவர் பயன்படுத்த முடியும்.

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 948 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த பேமிலி போஸ்ட்பெயிட் சலுகையானது ஏற்கனவே அந்நிறுவனம் வழங்கி வரும் ரூ. 699 சலுகையின் வேறுப்பட்ட சலுகை ஆகும். புதிய ரூ. 948 சலுகையினை இருவர் பயன்படுத்த முடியும். 
 
அதன்படி பிரைமரி பயனருக்கு அன்லிமிட்டெட் டேட்டாவும், இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், 30 ஜிபி டேட்டா ரோல் ஒவர் வசதி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை வழங்கப்படுகிறது.

முன்னதாக வி என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்கள் இம்மாத துவக்கத்தில் உயர்த்தப்பட்டன. அனைத்து சலுகைகளும் முந்தைய விலையில் இருந்து ரூ. 50 வரை உயர்த்தப்பட்டன. 

மேலும் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 சேவைக்கான சந்தா பிரைமரி இணைப்புக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தற்சமயம் வி ரூ. 948 சலுகை உத்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த சலுகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :