vodafone idea
Vodafone Idea யின் அதன் கஸ்டமர்களுக்கு Super Hero திட்டத்தை அறிமுகம் செய்தது அதாவது ரூ, 696 மற்றும் ரூ, 996 அதாவது இந்த திட்டத்தில் Amazon Prime நன்மையுடன் வருகிறது, மேலும் இந்த வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் Amazon Prime நன்மை பெறலாம் இந்தத் திட்டங்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் டேட்டா, காலிங் மற்றும் இலவச SMS ஆகியவற்றை வழங்குகின்றன. கூடுதலாக, வோடபோன் ஐடியாவின் சில சூப்பர் ஹீரோ திட்டங்களில் அமேசான் பிரைம் சந்தாவும் அடங்கும். மேலும் இந்த திட்டத்தில் வரும் முழு தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியா ரூ.696 திட்டம் இதன் நன்மையை பற்றி பேசினால், அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS, மற்றும் அன்லிமிடெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றை கஸ்டமர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 56 நாட்கள். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மை 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் ஆகும், இதன் மூலம் நீங்கள் HD (720p) கன்டென்ட் பார்க்கலாம் மற்றும் அமேசான் வழியாக ஒரு நாள் இலவச டெலிவரிகளை செய்யலாம். 5G போனை பயன்படுத்தும் பயனர்கள், நாடு முழுவதும் பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5G டேட்டா கனெக்ஷன் பெற முடியும்.
இதையும் படிங்க தரமான சம்பவம் செஞ்ச BSNL, ஜியோவின் ரூ,399 யில் தரமுடியாததை வெறும் ரூ,225 யில் தினமும் 2.5GB டேட்டா 30 நாள் வேலிடிட்டி
வோடபோன் ஐடியா ரூ.996 திட்டம் உண்மையிலேயே அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ,துனமும் 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றுடன் பயனர்களுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 84 நாட்கள். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மை 90 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் ஆகும். இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு 5G நன்மையுடன் வரும். 5G டேட்டா கனெக்ஷன் பல நகரங்களுக்கு பரவி வருகிறது, மேலும் இது விரைவில் அதிக கஸ்டமர்களுக்கு கிடைக்கும். டெல்கோ வழங்கும் பல்வேறு வகையான இடைவிடாத ஹீரோ திட்டங்கள் உள்ளன