வோடபோன் ஐடியா, தற்போது அதன் பயனர்களுக்காக தங்களின் ரீசார்ஜ் பேக்குகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பித்து உள்ளது
ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது
இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா, தற்போது அதன் பயனர்களுக்காக தங்களின் ரீசார்ஜ் பேக்குகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பித்து உள்ளது. ரூ. 500-க்கு கீழ் உள்ள ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 மற்றும் ரூ.475 ஆகிய இரு பேக்குகள் தான் தற்போது கூடுதல் சலுகைகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது 4 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி ஏற்கனவே இருந்தபடி வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர், இலவச காலிங், மெசேஜ் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை 3.5ஜிபி டேட்டாவாக அதிகரித்துள்ளனர். மற்றபடி ஏற்கனவே இருந்தது போலவே இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ், போன்ற சலுகைகளும் இதில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.