சும்மா அதிரடி காட்டும் VI ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் ஒரு வருடம் முழுதும் டென்ஷன் இல்லை jio-Airtel டஃப் கொடுக்கும்

மூன்றாவது மிக பெரிய நிறுவனமான Vodafone Idea (VI) யின் இந்த திட்டத்தை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து ஒரு வருட முழுதும் ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து நிம்மதியாக இருக்க விரும்பினால், நீங்கள் VI யின் இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு வருடம் வரை ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் VI யின் இந்த வருடாந்திர திட்டம் ரூ,3499 யில் வருகிறது இது முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Vi யின் ரூ,3499 வருடாந்திர திட்டம்.

Vi-யின் ரூ. 3499 திட்டத்தில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதாவது, நீங்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், ஓராண்டு முழுவதும் மீண்டும் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை. இந்தத் திட்டம் கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் கால்கள், தினமும் 100 இலவச SMS மெசேஜ்கள் மற்றும் தினமும் 1.5GB டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. Vi-யின் 5G சேவை கிடைக்கும் பகுதிகளில், 5G பயனர்களும் அன்லிமிடெட் டேட்டாவின் பலனைப் பெறலாம்.

இதையும் படிங்க வெறும் ரூ,99 யில் Netflix உடன் 20க்கும் மேற்பட்ட OTT நன்மை Airtel சூப்பர் பிளான்

டேட்டா ரோல் ஓவர் நன்மைகள்

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் கூடுதல் டேட்டா பலன்கள்தான். பயனர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் நைட் டேட்டாவைப் பெறலாம் , அதாவது அவர்கள் இரவில் எந்த லிமிட்டும் இல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்தலாம். இந்நிறுவனம் வார இறுதி டேட்டா ரோல்ஓவரையும் வழங்குகிறது. உங்களிடம் மீதமுள்ள தினசரி டேட்டா இருந்தால், அதைச் சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயன்படுத்தலாம். மேலும், Vi நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 2GB பேக்கப் டேட்டாவை வழங்குகிறது, இதன் மூலம் தேவைப்பட்டால் நீங்கள் கூடுதல் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட்?

Vi-யின் ரூ.3499 திட்டமானது அடிகடி ரீச்சார்ஜ் விரும்பாத கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும். இன்டர்நெட் அடிக்கடி பயன்படுத்துபவர்கள், சோசியல் மீடியாக்கள் மற்றும் OTT தளங்களில் நேரத்தைச் செலவிடுபவர்கள், மற்றும் நீண்ட கால வேலிடிட்டி விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் குறிப்பாகப் பயனுள்ளதாக அமையும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :