Vi–HMD super Saver offer
Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு சூப்பர் சேவர் ஆபராக HMD மொபைல் உடன் கூட்டு சேர்த்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பீச்சர் போனை டார்கெட் செய்துள்ளது, இதனுடன் இந்த திட்டத்தில் அதிகபட்ச வொயிஸ்,டேட்டா மற்றும் SMS போன்ற நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது HMD மற்றும் நோக்கியா பீச்சர் போன் பயனர்களுக்கும் இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த ஆபரின் கீழ் HMD 100, HMD 101 or Nokia 105 கிளாசிக் பீச்சர் போன் டிசம்பர் 24, 2025 மற்றும் முக்கியமான முதல் ரீச்சார்ஜ் ரூ,140 உடன் 30 நாட்கள் வரை சிம் ஏக்டிவேஷன் செய்ய முடியும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,2GB டேட்டா மற்றும் 300 SMS உடன் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும். மேலும் இந்த நன்மையானது முதல் ரீச்சார்ஜ் செய்வோருக்கு மட்டுமே கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் நன்மை ஆரம்ப விலை ரூ,199 ஆகும் ஆனால் நீங்கள் ரூ,140 செலுத்தினால் மட்டும் போதும், இதன் மூலம் ரூ,59 மிச்சப்படுத்தலாம் இந்த நன்மையானது நீங்கள் முதல் முறையாக ரீச்சார்ஜ் செய்ததிலிருந்து 12 மாதங்கள் வரை மட்டுமே ரீச்சார்ஜ் பொருந்தும் அதாவது இந்த அர்த்தம் இந்த 12 மாதங்களுக்குள் ஒவ்வொரு மாதத்தின் படி ரூ,800 வரை சேமிக்கலாம்.
சப்ஸ்க்ரைபர் தகுதியான டிவைஸ் பயன்படுத்தும் வரை மட்டுமே வழங்கப்படும் சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும். வேறு ஏதேனும் போனில் சிம் பயன்படுத்தப்பட்டால், சலுகைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, தகுதியான டிவைஸின் சிம் மீண்டும் செருகப்பட்டவுடன் மீண்டும் தொடங்கும். இந்தச் சலுகையை ஒரு டிவைஸ்க்கு ஒரு மொபைல் எண்ணிற்கும் ஒரு முறை மட்டுமே பெற முடியும்.
இதையும் படிங்க:பல்லே பல்லே Airtel யின் பக்கவான ஆபர் வெறும் ரூ,40க்குள் வரும் திட்டத்தில் 9GB டேட்டா
VI யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங் உடன் 15 நாட்கள் வேலிடிட்டி உடன் சந்தையில் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டமானது ஒரு சில தேர்டுக்கப்பட்ட ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் அதாவது Vi–HMD Super Saver Offer கீழ் வரும். மேலும் இந்த திட்டமானது புதிய Vi SIM கஸ்டமராக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும், மேலும் இந்த திட்டமானது ரூ,140 யில் அன்லிமிடெட் கால்கள், தினமும் 2GB டேட்டா மற்றும் 300 SMS உடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது.
தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யாத சப்ஸ்க்ரைபைர்கள் , வழக்கமான ரூ.140 திறந்த சந்தை ரீசார்ஜின் கீழ் பொருந்தும் வகையில், கூடுதல் டேட்டா மற்றும் SMS சலுகைகள் இல்லாமல், 15 நாட்களுக்கு ஸ்டேண்டர்ட் அன்லிமிடெட் காலிங் சலுகைகளை மட்டுமே பெறுவார்கள் என்று வோடபோன் ஐடியா தெளிவுபடுத்தியது.
Vi –HMD சூப்பர் சேவர் சலுகை, நிறுவனத்தின் விருப்பப்படி நீட்டிக்கப்படாவிட்டால் அல்லது குறைக்கப்படாவிட்டால், ஜனவரி 14, 2026 முதல் ஜூன் 30, 2026 வரை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் புதிய சிம்மைப் பெற Vi ரீடைளர் விற்பனைக் கடைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்களைப் பார்வையிடலாம் மற்றும் நன்மைகளை அனுபவிக்கலாம்.