Vodafone Idea
Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல் 5G நன்மையை வழங்குகிறது, அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,719 யில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தில் தினமும் 1 GB டேட்டா நன்மை வழங்கினாலும் இந்த திட்டத்தில் 5G நன்மை வழங்குகிறது அதாவது ஜியோ தனது 5G நன்மை தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தில் மட்டுமே வழங்கும் நிலையில் இந்த VI யின் இந்த திட்டம் பெஸ்ட் நன்மையாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடஃபோன் ஐடியாவின் ₹719 ப்ரீபெய்ட் திட்டம், கஸ்டமர்களுக்கு 72 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. நிறுவனம் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் டேட்டா வரம்பு எட்டப்பட்ட பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம் Vi பயனர்கள் வரம்பற்ற 5G அக்சஸ் நன்மையையும் வழங்குகிறது .
இதையும் படிங்க:கம்மி விலையில் Airtel யின் பக்கவான பிளான் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா
5G டேட்டா பயன்பாட்டிற்கு, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300GB FUP லிமிட் உள்ளது. இதன் பொருள், 72-நாள் வேலிடிட்டி உடன் , ஒவ்வொரு 28 நாட்களுக்கும் உங்களுக்கு 300GB அதிவேக டேட்டா லிமிட் கிடைக்கும். 28 நாட்களுக்கு முன்பே இந்த லிமிட் தீர்ந்துவிட்டால், உங்கள் இன்டர்நெட் ஸ்பீட் குறையும். மேலும், இந்தத் திட்டத்தின் முழுப் பலனையும் பெற, பயனர்கள் 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போனை வைத்திருக்க வேண்டும் மற்றும் 5G நெட்வொர்க் கவரேஜ் உள்ள பகுதியில் வசிக்க வேண்டும். அப்போதுதான் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.