இந்தியாவில் Starlink திட்டத்தின் விலை அறிவிச்சுட்டங்கபா ஒரு மாசத்து ரூ,8,600 இப்போதைக்கு ட்ரையால் இலவசம்

Updated on 08-Dec-2025
HIGHLIGHTS

எலான் மாஸ்க்கின் நிறுவனமான சேட்லைட் இன்டர்நெட்டான Starlink இந்தியாவில் ஆரம்பம்

இதில் நிறுவனம் தற்பொழுது அதன் பிரத்யோக வெப்சைட்டை லைவ் செய்துள்ளது

ரெஜிஸ்ட்ரேஷன் திட்டத்தின் விலை மாதந்திரம் ரூ,8,600 ஆகும் மேலும் இது ஒரு மாதம் மட்டுமே வேலிடிட்டி வழங்கும்

எலான் மாஸ்க்கின் நிறுவனமான சேட்லைட் இன்டர்நெட்டான Starlink இந்தியாவில் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிறுவனம் தற்பொழுது அதன் பிரத்யோக வெப்சைட்டை லைவ் செய்துள்ளது இதனுடன் அதன் விலை தகவலையும் வெளியிட்டுள்ளது. ஸ்டார்லிங்கின் படி அதன் ரெஜிஸ்ட்ரேஷன் திட்டத்தின் விலை மாதந்திரம் ரூ,8,600 ஆகும் மேலும் இது ஒரு மாதம் மட்டுமே வேலிடிட்டி வழங்கும், இருப்பினும் நிறுவனம் ஒரு மாதம் இலவச ட்ரையல் வழங்குகிறது, மேலும் இதில் இருக்கும் பாலிசி என்னவென்றால் சேவையில் திருப்தி இல்லை என்றால் முழு பணமும் வாபஸ் பெறலாம் மேலும் இதன் மூலம் உங்களுக்கு அதிவேக இன்டர்நெட் நன்மை பெறலாம் மேலும் இதன் பயன்மற்றும் கூடுதல் தகவலை பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஸ்டார்லின்க் இந்தியாவில் அதன் வெப்சைட் https://starlink.com/in லைவ் செய்துள்ளது. இந்த வெப்சைட்டில் அதன் திட்டத்தின் விலை தகவலை கூறியுள்ளது. இதன் மாதந்திர திட்டத்தின் விலை ரூ,8,600ரூபாயாகும்மேலும் நீங்கள் இதற்க்கு தனியாக ஹார்ட்வேர் கிட் வாங்க வேண்டும் என நினைத்தால் அதன் விலை ரூ, 36 ஆயிரம் ஆகும் ஆனால் இது ஒரு முறை கொடுத்தால் மட்டும் போதும்.

starlink plan

வலைத்தளத்தின்படி, ₹8,600 சந்தா திட்டம் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. புதிய கஸ்டமர்களுக்கு 30 நாள் இலவச சோதனையும் கிடைக்கும். சேவை பிடிக்கவில்லை என்றால் முழு பணத்தைத் திரும்பப் பெறுவதாகவும் நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த அமைப்பு அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், 99.9% க்கும் அதிகமான இயக்க நேரத்தைக் கொண்டதாகவும் நிறுவனம் கூறுகிறது. இதன் பொருள் ஸ்டார்லிங்கின் நெட்வொர்க் அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படும். ஸ்டார்லிங்கின் சேவையைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்று வலைத்தளம் கூறுகிறது. பயனர்கள் தங்கள் சாதனத்தை செருக வேண்டும், மேலும் அவர்களின் கனெக்ஷன் செயல்படுத்தப்படும். பிராட்பேண்ட் இல்லாத வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க IndiGo சாப்ட்வேர் கோளாறு பயணிகள் வேதனை ஒரே நாளில் 400 விமானம் கேன்ஸில்

சமீபத்திய தகவல்கள், SpaceX துணை நிறுவனம், சண்டிகர், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் நொய்டா உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல இடங்களில் அதன் நுழைவாயில் பூமி நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றன.

அதாவது இந்த நிலையங்களின் மூலம் SpaceX சேட்லைட் கனெக்ஷன் மற்றும் பூமிக்க்கு இடையில் சரியான பாதையை அமைத்து கொடுக்கும் , முன்பு இந்த ஆண்டு நிறுவனம் லைசன்ஸ் அதற்க்கான ஜூலை மாதம் பெறப்பட்டது DoT யின் படி இந்த சேட்லைட் கமேர்சியளுக்கு பயன்படுத்த இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :