ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோஸ் லைட் (JioPOS Lite) எனும் செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு யார் வேண்டுமானாலும் ஜியோ பார்ட்னர் ஆகி மற்றவர்களுக்கு ஜியோ ரீசார்ஜ்களை மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் பங்கேற்பவர் எவ்வித சான்றையு்ம சமர்பிக்க தேவையில்லை என ஜியோ தெரிவித்துள்ளது.
இந்த செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இது ஐஒஎஸ் தளத்திலும் வெளியாகலாம். இதில் கலந்து கொள்வோர் தங்களது விவரங்களை பதிவிட்டு, தேவையான ஆவணங்களை சமர்பித்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஜியோபோஸ் லைட்
ஜியோபோஸ் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி?
– ஜியோபோஸ் லைட் செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்
– மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்
– வாலெட்டில் பணத்தை சேர்க்க வேண்டும்
– இனி ஜியோ நம்பர்களுக்கு ரீசார்ஜ் செய்து அதற்கான கமிஷன் தொகையை பெறலாம்
– தினசரி வருவாய் விவரங்களை அதற்கான டேஷ்போர்டு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்
– ஜியோபோஸ் லைட் மூலம் ரூ. 100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ. 4.16 வரை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற சேவையை தனது ஏர்டெல் தேங்ஸ் செயலியில் அறிவித்தது. இந்த திட்டத்தை ஏர்டெல் சூப்பர் ஹீரோ என அழைத்தது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரீசார்ஜிலும் 4 சதவீதம் வரை சம்பாதிக்க முடியும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.