ஜியோ நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான மூன்றாவது காலாண்டில் மட்டும் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ உள்நாட்டில் வாய்ஸ் கால் சேவையை இலவசமாக வழங்க துவங்கியது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான மூன்றாவது காலாண்டில் மட்டும் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்று இருக்கிறது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ உள்நாட்டில் வாய்ஸ் கால் சேவையை இலவசமாக வழங்க துவங்கியது. விதிகளில் தளர்வு மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்வு உள்ளிட்டவை புது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இது டெலிகாம் துறையில் இதுவரை இல்லாத அளவு அதிகம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவின் ARPU ரூ. 151 ஆக அதிகரித்து இருக்கிறது. ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.08 கோடியாக இருக்கிறது. ஜியோவின் டேட்டா பயன்பாடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 28.4 சதவீதம் அதிகம் ஆகும்.
டெலிகாம் சந்தையில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. 2020 ஆண்டு மட்டும் ஜியோ நிறுவனத்தில் சுமார் 4 கோடி பேர் இணைந்துள்ளனர்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.