jio family plan
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,500க்குள் வரும் பேமிலி திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் ஒரு குடும்பத்தில் ஆளுக்கு ஒரு முறை ரீச்சார்ஜ் செய்யும் தொல்லை இல்லாமல் வெறும் ரூ,449 யில் வரும் இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 3 பேர் பயன்படுத்த முடியும் அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , டேட்டா மற்றும் பல நன்மை வழங்கப்படுகிறது இதன் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் ரூ.449 போஸ்ட்பெய்டு திட்டம் ஒரு குடும்பத் திட்டமாகும். இந்தத் திட்டத்துடன் நிறுவனம் கஸ்டமர்களுக்கு ஒரு மாத வேலிடிட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கஸ்டமர் தங்கள் சொந்த சிம் கார்டுகளுடன் கூடுதலாக மூன்று சிம் கார்டுகளைச் சேர்க்கலாம். இதன் பொருள், உங்கள் சிம்மில் மூன்று குடும்ப மெம்பர்களின் நம்பர்களை சேர்க்கலாம், இதன் மூலம் ஒரே திட்டத்தின் கீழ் நான்கு சிம் கார்டுகள் ஒரே நேரத்தில் செயலில் இருக்க முடியும். பயனரின் சிம் கார்டு முதன்மை சிம் கார்டாக இருக்கும், இது அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. மற்ற மூன்று சிம் கார்டுகள் கூடுதல் சிம் கார்டுகளாக இருக்கும், இது குறைந்த டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், கூடுதல் சிம் கார்டுகளைச் சேர்ப்பதற்கு ஒரு சிம் கார்டுக்கு ரூ.150 மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும்.
ஜியோவின் இந்த திட்டத்தில் ஒரு மாதம் வரை கஸ்டமர்கள் எந்த நெத்வொர்க்கிளிருந்தும் அன்லிமிடெட் காலிங் தினமும் 100 இலவச SMS இதனுடன் ஒரு மாதம் முழுதும் 75GB டேட்டா நன்மை இருப்பினும் டேட்டா லிமிட் முடிந்த பிறகு ஒவ்வயொரு GBக்கும் ரூ,10 வசூலிக்கப்படும் மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மை 5GB டேட்டா எக்ஸ்ட்ரா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க வெறும் ரூ,140க்கு VI ஒரு மாசம் முழுசா 1 மாதம் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை
இந்த திட்டத்தில் காலிங் மற்றும் டேட்டாவைத் தவிர, ஜியோ தனது கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் டிவி சப்ஸ்க்ரிப்ஷன் , ஜியோ டிவி, 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் இலவச சேமிப்பு, 2 மாதங்களுக்கு ஜியோ ஹோம் இலவச டெஸ்ட்டிங் கனெக்ஷன் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட கஸ்டமர்கள் 18 மாதங்களுக்கு ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா ஆகியவற்றை வழங்குகிறது, அதுவும் முற்றிலும் இலவசம்.