Jio data pack
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் 4G டேட்டா பேக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் 100ரூபாய்க்கும் குறைந்த விலையில் டேட்டா பேக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த மூன்று திட்டமும் 4G டேட்டா வவுச்சர் திட்டமாகும் இந்த திட்டத்தின் விலை ரூ, 11, ரூ,19, மற்றும் ரூ,29 யில் வரும் திட்டங்கள் ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.11 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு மணி நேர சேவை வேலிடிட்டி தன்மையுடன் வருகிறது. இது கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாகளுடன் வருகிறது. இது உண்மையில் 10 ஜிபி டேட்டாவை மட்டுமே குறிக்கிறது, மேலும் இது உண்மையில் அன்லிமிடெட் அல்ல. FUP (ஸ்டேண்டர்ட் பயன்பாட்டுக் கொள்கை) டேட்டா பயன்படுத்திய பிறகு வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.19 ப்ரீபெய்ட் திட்டம் 1 ஜிபி டேட்டா மற்றும் 1 நாள் வேலிடிட்டியாகும் . இந்த திட்டம் உங்கள் FUP டேட்டா தீர்ந்து, டேட்டா ரீஸ்டோர் செய்வதற்க்கு முன்பு இன்னும் கொஞ்சம் தேவைப்படும் ஒரு நாளுக்கு மட்டுமே வேலிடிட்டியாகும் .
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.29 திட்டம் 2 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த திட்டம் 2 ஜிபி டேட்டாவுடன் மட்டுமே வருகிறது. 2 ஜிபி டேட்டாவும் அதிகம் இல்லை, ஆனால் அவசரகால பேக்கப் பயன்படுத்தப்படலாம், ஆனால் இது இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த திட்டங்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் தேவை என்பதை நினைவில் கொள்ளவும். ஆக்டிவ் பேஸ் திட்டம் இல்லாமல், கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் டேட்டா திட்டங்களிலிருந்து டேட்டா நன்மைகளைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு டெலிகாம் வட்டத்திலும் உள்ள ஒவ்வொரு கஸ்டமர்களுக்கு இந்தத் திட்டங்கள் பொருந்தும்.