Jio
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் Reliance Jio யின் அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,339 யில் புதிய போர்ட்போலியோ திட்டத்தை கொண்டு வந்துள்ளது, ஜியோவில் இப்படி ஒரு திட்டம் இருப்பது பெரும்பாலும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, அதாவது இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் மாதம் முழுவதும் அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டின் சமச்சீரான கலவையை விரும்புபவர்களுக்கானது. இதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது ஒரு மாதத்திற்கான வேலிடிட்டியுடன் வருகிறது – அதாவது, ஒரு மாதத்தில் 31 நாட்கள் இருந்தால், இந்தத் திட்டம் அத்தனை நாட்களுக்குச் வேலிடிட்டியாகும் மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ, 339 ரீசார்ஜில், லோக்கல் , STDமற்றும் ரோமிங் கால்கள் உட்பட அன்லிமிடெட் கால்கள் , தினமும் 100SMS நன்மைகளுடன் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 46.5GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் மூலம் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டியை வழங்குகிறது
இந்தத் திட்டம் பயனர்களுக்கு ₹14.95 மதிப்புள்ள டாக் டைம் பேலன்ஸையும் வழங்குகிறது. மிக முக்கியமாக, இதில் ₹35,100 விலையுள்ள மற்றும் 18 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் அடங்கும். மேலும் இந்த திட்டமானது அந்த மாதத்தில் வரும் நாட்களை பொறுத்து வழங்குகிறது அதாவது உதாரணமாக அந்த மாதத்தில் 31 தேதி வரை இருந்தால் 31 நாட்கள் வரை இருக்கும்.
இதையும் படிங்க:கம்மி விலையில் Airtel யின் பக்கவான பிளான் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா
ரிலையன்ஸ் ஜியோஅதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ,339யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால், தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் OTT மற்றும் அன்லிமிடெட் 5G நன்மை ஏதும் கிடைக்காது , ஏன் என்றால் OTT மற்றும் 5G நன்மையை பெற குறைந்தபட்ச 2GB டேட்டா தேவைப்படும் ஆனால் இந்த திட்டத்திலோ வெறும் 1.5GB டேட்டா மட்டுமே வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் மற்ற நன்மைகள் என பார்த்தால் JioTV, JioTV AI Cloud ஆப் சப்க்ரிப்ஷன் போன்றவற்றை பெறலாம்.
ஜியோவின் புதிய திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இது ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ஒரு நாள் கணக்கு போட்டால் ரூ,10.93 – ரூ,11.30 ஆக இருக்கிறது ஆனால் அந்த மாதத்தில் வரும் மொத்த நாட்கள் பொருத்து இந்த திட்டத்தின் தினசரி விலை வேறுபடலாம.