Jio Anniversary plan rs 100
Jio Anniversary plan: இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களின் ஒன்றான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதன் விலை ரூ,100 ஆகும் , இந்த திட்டமானது இந்தியாவில் உள்ள அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கும், இந்த திட்டமானது சேவை வேலிடிட்டி திட்டமல்ல ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை மட்டும் பெற முடியும் மேலும் இதில் OTT (over-the-top) JioHotstar நன்மை போன்றவற்றை பெறலாம் இது ஒரு ஜியோ கொண்டாட்டம் திட்டமாகும் இதில் பல அசத்தும் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபர் நன்மை அறிவிப்பு அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டத்தை பற்றி பேசினால் அது ரூ,100 யில் வருகிறது இது 5GB யின் டேட்டா நன்மையுடன் இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் உங்களுக்கு மிக பெரிய நன்மையாக JioHotstar Mobile/TV நன்மை 30 நாட்களுக்கு வழங்குகிறது, இதை தவிர 9 வது ஆண்டு கொண்டாட்டமாக மேலும் பல நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டில் ரூ,349 கொண்ட திட்டத்தில் வரும் நன்மையை போல இந்த திட்டத்திலும் வருகிறது
மேலும் இதில் 5GB டேட்டா தீர்ந்தால் 64 Kbps வரை குறைக்கப்படும், இந்த திட்டமானது 9வது ஆண்டு கொண்டாட்ட திட்டமாக கொண்டாப்படுகிறது. நீங்கள் JioHotstar நன்மை பற்றி பெற விரும்பினால் ரூ, 195 மற்றும் ரூ,949. ஆகும் இப்பொழுது அந்த வரிசையில் ரூ,100 வரும் டேட்டா வவுச்சர் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:போட்டிக்கு அறிமுகம் செய்த Jio புதிய ரூ,77 திட்டம், ஆனால் BSNL முன்னாடி பல்பு தான்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதை தவிர கஸ்டமர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஜியோ இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிடெட் சலுகையையும் வழங்குகிறது.
இந்த நிலையில், ஜியோ இந்த திட்டத்துடன் ஆண்டுவிழா சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் ஜியோஃபைனான்ஸுடன் 2% கூடுதல் தங்கம், ஜியோஹோம் 2 மாத இலவச இணைப்பு, ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா, ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.399 தள்ளுபடி, குறைந்தபட்சம் ரூ.1,000 ஆர்டருக்கு ரூ.200 தள்ளுபடி, மூன்று மாத ஜொமாட்டோ கோல்ட், ஒரு மாத ஜியோசாவன், நெட்மெட்ஸ் ஆறு மாத சந்தா, EaseMyTrip உள்நாட்டு (Domestic)விமானங்களில் ரூ.2,220 தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி மற்றும் ஜியோஏஐகிளவுட் இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.