அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால் கட்டணம் டிராய் உத்தரவின் பேரில் இன்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணத்திற்காக (ஐ.யு.சி.) வசூலிக்கப்படுவதாக ஜியோ தெரிவித்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் கால்கள் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால் கட்டணம் டிராய் உத்தரவின் பேரில் இன்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணத்திற்காக (ஐ.யு.சி.) வசூலிக்கப்படுவதாக ஜியோ தெரிவித்தது.
இலவச வாய்ஸ் கால் சேவை வேலிடிட்டி இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும். ஏற்கனவே ரீசார்ஜ் செய்த சலுகைக்கான வேலிடிட்டி தீர்ந்ததும், வழக்கமான ரீசார்ஜ் மற்றும் ஐ.யு.சி. டாப் அப் வவுச்சர்களை சேர்த்து வாங்க வேண்டும். இதை கொண்டு மற்ற நெட்வொர்க்களுக்கு வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும்.
புதிதாக வாய்ஸ் கால் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஜியோ சார்பில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 10 கட்டணத்திற்கு 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ புதிய அறிவிப்பின் படி அக்டோபர் 9 மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்கள் தொடர்ந்து வாய்ஸ் கால்களை இலவசமாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நான்கு ஐ.யு.சி. டாப் அப் வவுச்சர்களை அறிவித்தது. இவற்றின் விலை ரூ. 10-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்களில் அதிகபட்சம் 1362 நிமிடங்களும், 20 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவற்றை ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் கால்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.