Jio அதன் அடுத்த ஜெனரேசன் Jio AI Cloud அறிவித்தது இதனால் என்ன பயன் எப்படி வேலை செய்யும்

Updated on 29-Aug-2025

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு அடுத்த ஜெனரேசன் AI cloud மாடலான Jio AI Cloud அறிவித்துள்ளது இதில் க்ளவுட் ஸ்டோரேஜ் டேட்டாவில் அதிகமான நன்மை கிடைக்கும் அதாவது இந்த Jio AI Cloud கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது இதில் அனைத்து கஸ்டமர்களுக்கும் 100GB இலவச க்ளவுட் ஸ்டோரேஜ் வழங்குகிறது . மேலும் இதில் 40 மில்லியன் இந்திய மக்கள் இந்த AI cloud சிஸ்டம் சுற்றுசூழலில் தங்களின் முக்கியமான பில் பேக்கப், வீடியோ போன்றவை பாதுகாப்பாக இருக்கிறது என கூறியுள்ளனர் என நிறுவனம் கூறியுள்ளது

இந்த நிறுவனம் AI-யால் இயங்கும் மெமரி துணையை உருவாக்கியுள்ளது, இது அடிப்படை குரல் தூண்டுதல்களைப் பயன்படுத்தி தரவைச் சேமிக்கவும் தடையின்றி தேடவும் உங்களை அனுமதிக்கும் திறன் கொண்டது. இந்த அம்சம் கூகிளின் பிக்சல் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் விண்டோஸ் ரீகால் போன்றது, அவை முறையே தொலைபேசிகள் மற்றும் PC களில் வேலை செய்கின்றன. ஆனால் ஜியோ AI கிளவுட் பல்வேறு தளங்களில் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Next Gen Jio AI Cloud: என்ன புதுசா வழங்குகிறது?

Jio AI Cloud யில் அடுத்த ஜெனரேசனாக பைல்அல்லது வீடியோ போன்றவற்றை எளிதாக சர்ச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. உதாரணமாக நீங்கள் எதாவது முக்கியமான போட்டோ தேடுகிறிர்கள் மற்றும் அது மிகவும் பழமையானது என்றால் Hello Jio என கூறி உதாரணமாக துபாயிலிருந்த போட்டோ உங்களின் நாய்குட்டியுடன் இருக்கும் போட்டோ போன்றவற்றை எளிதாக சர்ச் செய்யலாம் மேலும் இந்த Jio AI Cloud மூலம் சரியான பைல் ஒரு சில செக்கண்டில் கண்டுபிடித்து தரும்..

அதோடு மட்டும் அல்ல, நீங்கள் ஒரு படத்தை கிளவுட் ஸ்டோரேஜில் பதிவேற்றும்போது, ​​தினசரி பைல்கள் , பில்கள் மற்றும் ரசீதுகளை அழகாக வகைப்படுத்த ஜியோ AI கிளவுட் உங்களுக்கு உதவும். இது ஆதார் கார்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving licence) போன்ற முக்கியமான தனிப்பட்ட டாக்யுமேன்ட்களுக்கு பொருந்தும் மற்றும் அவற்றை அடையாளக் பைலில் சேமிக்கவும் உதவும்.

இதையும் படிங்க Jio ரூ,100க்குள் வரும் திட்டம் ஆனால் இது அனைவருக்கும் கிடையாது ஏன் என பாருங்க

இதன் AI அப்டேட்கள் மூலம் Jio AI Cloud உடன் அதன் சொந்த AI Hub உருவாக்குகிறது இதன் மூலம் உங்களின் அனைத்து போட்டோ மற்றும் வீடியோ சேமிக்கும் மேலும் cloud மூலம் புதிய ஜெனரேசன் உருவாக்கும் AI Create Hub மூலம் உங்களின் ரீல்ஸ் தினசரி போட்டோ, வீடியோ போன்றவற்றை மற்றும் நன்மைபர்களுடன் பகிரபட்டவை பெற பட்டவை அனைத்தும் சிறிய கிரியேட்டர் மூலம் உருவாக்கும் மேலும் இது இது சிறிய கிரியேட்டர் அல்லது தங்கள் க்ரிஎட்டர்களை டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்தி ஷாப்பிங் செய்ய விரும்பும் கடைக்காரர்களுக்கு கூட மிகவும் உதவியாக இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :