Jio யின் பக்கவான திட்டம் கம்மி விலையில் அதிக டேட்டா நன்மை

HIGHLIGHTS

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு டேட்டா பேக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும், இதன் விலை ரூ,289 ஆகும்

நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு டேட்டா பேக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது டேட்டா நன்மை மட்டும் விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் அதாவது வெறும் டேட்டா விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும், இதன் விலை ரூ,289 ஆகும் அதிக காலிங் அல்லது மெசேஜ் தேவையில்லாத, மாறாக இன்டர்நெட் டேட்டாவை மட்டுமே நம்பியிருக்கும் கஸ்டமர்களுக்கு நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,289 திட்டம்

இந்த புதிய ஜியோ திட்டம் வெறும் ரூ,289க்கு கிடைக்கிறது. இதன் காலம் 30 நாட்கள், அதாவது நீங்கள் மாதம் முழுவதும் எந்த தொந்தரவும் இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தலாம்.இந்த பேக் 40GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. உங்கள் டேட்டா லிமிட்டை அடைந்ததும், உங்கள் வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது. இதன் பொருள் உங்கள் டேட்டா தீர்ந்த பிறகும் கூட நீங்கள் அடிப்படை பிரவுசிங் மெசேஜ் தொடர முடியும்.காலிங் மற்றும் மெசேஜ் அனுப்புவதை விட ஆன்லைனில் அதிக நேரம் செலவிடும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சரியானது.

இதையும் படிங்க வெறும் ரூ,155க்கும் கம்மியா வரும் Jio திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை

சோசியல் மீடியாக்களில் பிரவுசிங் செய்வது , வீடியோக்களைப் பார்ப்பது அல்லது ஆன்லைன் கிளாஸ் கலந்துகொள்வது என எதுவாக இருந்தாலும் – 40 ஜிபி டேட்டா போதுமானதாக இருக்கும். இந்த பேக் அன்லிடேத் காலிங் , SMS அல்லது OTT சந்தாக்கள் போன்ற பலன்களை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது முற்றிலும் தரவு மையப்படுத்தப்பட்ட திட்டம்.

Jio ரூ,152 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டமானது ரூ,152 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும். இது ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 1 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. காலிங் முற்றிலும் அன்லிமிடடாக செய்யலாம், இதனுடன் இதில் 300 SMS நன்மை வழங்கப்படுகிறது. இது ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுடுக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. இது பட்ஜெட்டுக்கான முழுமையான திட்டமாகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :