ஜியோவுக்கே ஷாக் கொடுத்த VI அதிவேக நெட்வொர்க் உடன் என்ட்ரி.

Updated on 30-Oct-2020
HIGHLIGHTS

அதிவேக மொபைல் ஆபரேட்டராக வி (வோடபோன் ஐடியா) இருந்தது.

ஊக்லா அறிக்கையின் படி வி நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகம் 13.74Mbps ஆகவும், 6.19Mbps அப்லோட் வேகம் வழங்கி இருந்தது

இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிவேக மொபைல் ஆபரேட்டராக வி (வோடபோன் ஐடியா) இருந்தது. 
 
முன்னணி நிறுவனமான ஜியோ 4ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்து இருக்கிறது. நெட்வொர்க் ஆய்வு நிறுவனமான ஊக்லா வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.  

ஊக்லா அறிக்கையின் படி வி நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகம் 13.74Mbps ஆகவும், 6.19Mbps அப்லோட் வேகம் வழங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் 13.58Mbps டவுன்லோட், 4.15Mbps அப்லோட் வேகம் வழங்கி உள்ளது. 

இதே காலக்கட்டத்தில் ஜியோ 9.71Mbps டவுன்லோட் வேகமும், 3.41Mbps அப்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. நாட்டில் அதிவேக டேட்டா கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை நான்காவது இடத்தில் உள்ளது.

நாட்டில் அதிவேக இணைய வசதி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப வேறுபடுகிறது. இதில் ஐதராபாத் அதிவேக டவுன்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த டவுன்லோட் வேகம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.6 சதவீதம் அதிகரித்து உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :