அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ரீச்சர்ஜில் 4 கனெக்சன் வழங்குகிறது அதும் இதன் விலை ரூ,1000க்கும் குறைவாக வரும் இந்த சிறப்புத் திட்டம் குறித்த தகவல்களை BSNL சோசியல் மீடியா தளமான X யில் வழங்கியுள்ளது.இந்தத் திட்டம் BSNL யின் போஸ்ட்பெய்டு கச்டமர்களுக்கானது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு பில்லில் 4 நம்பரில் அல்லது கனேக்சன்களை இயக்கலாம் அதாவது இந்த திட்டத்தின் வேறு என்ன நன்மைகள் வழங்குகிறது என முழுசா பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டமானது ரூ,999 யில் வருகிறது அதாவது, ஒரு கனேக்சனிற்க்கான பேமண்டை செலுத்துவதன் மூலம் மொத்தம் 4 வெவ்வேறு நம்பர்களை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு நம்பருக்கு தனித்தனி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கும். மேலும், ஒவ்வொரு நம்பருக்கும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படும். டேட்டாவை பற்றி பேசுகையில், இந்த திட்டத்தின் கீழ், பயனர் கஸ்டமருக்கு கனேக்சன்களுக்கு ஒரு மாதத்திற்கு தனித்தனியாக 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. சிறப்பு என்னவென்றால், இந்தத் டேட்டவின் எந்த லிமிட்டும் இருக்காது. இதன் பொருள் பயனர் ஒரு மாதத்தில் தனது வசதிக்கேற்ப 75 ஜிபி டேட்டாவை செலவிட முடியும். அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் விரும்பினால், ஒரே நாளில் அனைத்து டேட்டாவையும் பயன்படுத்தலாம் அல்லது ஒரு மாதத்தில் 75 ஜிபி டேட்டாவை தனது தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தின் விலை ரூ.999. அதாவது ரூ.999 பில்லில் இந்த அனைத்து வசதிகளையும் நீங்கள் பெறலாம் . இந்த செலவை நான்கு பேருக்குள் பிரித்தால், ஒரு பயனருக்கு வெறும் ரூ.249 தான் கிடைக்கும். இந்த வகையில், இது ஒரு மிகச் சிறந்த திட்டமாக நிரூபிக்கப்படலாம். இந்தத் திட்டம், வீட்டில் 4 மெம்பர்களுக்கு கொண்ட பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவர்கள் நான்கு மெம்பர்களையும் ஒரே திட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியும்.
இதையும் படிங்க:புதிய போன் வருகையால் Motorola யின் இந்த பழைய போனில் அதிரடி குறைப்பு