இந்தியாவிலே முதல் முறையாக ரூ,200க்கும் கம்மி விலையில் போஸ்ட்பெயிட் திட்டம், அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல
BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்கும் குறைந்த விலையில் போஸ்ட்பெயிட் திட்டம் கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு அதிகபட்சமாக 25GB டேட்டா வழங்கப்படுகிறது
இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்கும் குறைந்த விலையில் போஸ்ட்பெயிட் திட்டம் கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு அதிகபட்சமாக 25GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை போன்றவை வழங்குகிறது. இதில் என்ன சுவாரசியம் என்னவென்றால் இந்தியாவின் மிக பெரிய தனியார் டெலிகாம் நிறுவனத்தின் நம்பர்1 ஆக இருக்கும் Jio-வால் கூட இது முடியவில்லை மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,199 போஸ்ட்பெயிட் திட்டம்.
BSNL யின் இந்த திட்டம் ரூ,199 யில் வரும் போஸ்ட்பெயிட் திட்டமாகும் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் இந்த மாதம் எந்த தேதியில் ரீச்சார்ஜ் செய்கிறிகளோ, அடுத்த மாதம் அதே தேதியில் ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 100SMS மற்றும் இந்த திட்டத்தில் மொத்தம் 25GB டேட்டா வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு நல்ல அம்சம் டேட்டா ரோல்ஓவர் ஆகும். ஒரு மாதத்தில் நீங்கள் 25GB டேட்டாவில் 15GB-ஐ மட்டுமே பயன்படுத்தினால், மீதமுள்ள டேட்டாவை அடுத்த மாதத்தில் ரோல்ஓவர் விதிகளின்படி பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், மொத்த ரோல்ஓவர் லிமிட் 75GB ஆகும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா ஒரு மாதம் ஆகும் அதாவது எந்த தேதியில் ரீச்சார்ஜ் செய்கிறிர்களோ அடுத்த மாதம் அதே தேதியில் ரீச்சார்ஜ் செய்தால் போதும்.
BSNL ரூ,399 திட்டம்.
BSNL ரூ,199 திட்டத்தில் வரும் 25GB டேட்டா குறைவாக இருந்தால், அதாவது அதிககபட்சமான டேட்டா பெற விரும்பினால், பிஎஸ்என்எல் ரூ,399 யில் வரும் போச்ட்பெயிட் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம் , இது மாதத்திற்கு 70GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இதில் 210GB வரை டேட்டா ரோல்ஓவர் (data rollover) வசதியும் உள்ளது. இது மாதத்திற்கு 70GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இதில் 210GB வரை டேட்டா ரோல்ஓவர் (data rollover) வசதியும் உள்ளது.