BSNL யின் சுதந்திர தின சலுகை அறிவிப்பு.இதில் என்ன பலன் தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது

பி.எஸ்.என்.எல். பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும்

ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும்.

BSNL யின் சுதந்திர தின சலுகை அறிவிப்பு.இதில் என்ன பலன் தெரிஞ்சிக்கோங்க.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பி.எஸ்.என்.எல். பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும். அதன்படி பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.150 ரிசார்ஜில் ஃபுல் டாக்டைம் பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பின் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்பட்டு விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.

விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த சலுகை மிக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும். இது பற்றி வெளியாகி இருக்கும் அறிவிக்கையின் படி ஃபுல் டாக்டைம் சலுகை ஆகஸ்ட் 15, 2022 துவங்கி ஆகஸ்ட் 21, 2022 வரை வழங்கப்படும். முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி கொண்ட புது சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile