தித்திக்கும் பொங்கலை போல BSNL யின் ஆபர் உங்க மனச குளிர வைக்கும் மாதம் 5000GB டேட்டா, OTT போன்ற பல நன்மை

Updated on 15-Jan-2026

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு தை திருநாளன பொங்கல் முன்னிட்டு ஸ்பெஷல் ஆபரை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் டேட்டாவுக்கு பஞ்சம் இருக்காது அதாவது இந்த பொங்கல் ஸ்பெஷல் ஆபர் திட்டமாக ரூ,799 யில் 5000 GB வரையிலான டேட்டா மற்றும் இதன் மற்றொரு திட்டம் ரூ,625 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,799 super Star premium திட்டம்.

BSNL சூப்பர் ஸ்டார் பிரீமியம் திட்டம் ரூ. 799 (BSNL Super Star Premium Plan Rs 799) கஸ்டமர்களுக்கு பொங்கல் ஸ்பெஷல் திட்டமாக ஃபைபர் டூ தி ஹோம் கனெக்ஷன் வழியாக 200 Mbps ஸ்பீடில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். மாதத்துக்கு அதிகபட்சம் 5000 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 10 Mbps வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் (Unlimited Local & STD Calls) கிடைக்கும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), லயன்ஸ் கேட் பிளே (Lions Gate Play), ஹங்கமா (Hungama), சோனிலிவ் (SonyLIV) மற்றும் எபிக் ஆன் (EpicOn) ஆகிய OTT ஆப்களின் சந்தாவும் இந்த பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் பிரீமியம் திட்டத்தில் கிடைக்கும்.

இந்த சலுகைகளுடன் கூடுதலாக 600+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் டிவி சேனல்கள் கிடைக்கும். இந்த லைவ் டிவி சேனல்களுக்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை. நேரடியாக இன்ட்ராநெட் ஃபைபர் டிவி வழியாக பார்த்து கொள்ளலாம். DTHபோல டிஷ் தேவைப்படாது. கேபிள் டிவி போல தனியாக கனெக்ஷன் வேண்டியது கிடையாது. மேலும் இந்த திட்டத்தின் பழைய விலையிலிருந்து 20% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை ஜனவரி 14 முதல் மார்ச் 31 , 2026 வரை மட்டுமே இருக்கும்

இதையும் படிங்க BSNL ஸ்பெஷல் பொங்கல் ஆபர் முழுசா ரூ,1 யில் ஒரு மாதம் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா

BSNL ரூ,625 யின் Silver Jubilee திட்டம்.

BSNL ரூ,625 சில்வர் ஜூப்ளி (BSNLSilver Jubilee) திட்டம் பொங்கல் ஸ்பெஷல் ஆபரை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் மொத்தம் 2500GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் ஸ்பீட் 75 mbps வரை வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் எந்த நெட்வொர்க் இருந்தாலும் அன்லிமிடெட் லோக்கல்+STD கால் வழங்குகிறது இதை இதை தவிர OTT நன்மையாக Hostar,SonyLiV மற்றும் 600+ சேனல் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :