bsnl 2399 recharge plan offer whole year validity daily data and more benefits
அரசு நடத்தி டெலிகாம் நிறுவனம் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) என்றால் நம் தமிழ்நாட்டில் ஸ்பெஷல் தான் அந்தவகையில் பிஎஸ்என்எல் அதன் கஸ்டமர்களுக்கு அதன் நெட்வொர்க் பிரச்சனையை சமாளிக்க 4G மற்றும் பல முன்னேற்றத்தை கொண்டுவந்துள்ளது இதை தவிர தனியார் டெலிகாம் நிறுவனங்களே திணறும் வகையில் குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் நீண்ட நாள் வேலிடிட்டி போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த நன்மையை ஜியோ கூட தர முடியாமல் டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறது நீங்க BSNL கஸ்டமராக இருந்தால் இது பெஸ்ட்டாக இருக்கும் அதிக வேலிடிட்டி உடன் வரும் பெஸ்ட் திட்டங்கள் என்ன என்ன பார்க்கலாம் வாங்க.
இந்த திட்டம் குறித்த தகவல்களை BSNL தனது X அக்கவுண்ட்ல் வெளியிட்டுள்ளது. இந்த 50 நாள் திட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் என்று நிறுவனம் தனது பதிவில் தெரிவித்துள்ளது. இதனுடன், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவையும் பெறுவார்கள். இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347 ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, 400 ரூபாய்க்கும் குறைவாக, 50 நாட்கள் வேலிடிட்டி இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டம், கஸ்டமர்கள் சுமார் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
BSNL-ன் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும். குறிப்பாக இந்த சலுகையை தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து அதிக பணம் இருந்தும் இது போல அதிக வேலிடிட்டி வழங்குவதில்லை.
இதையும் படிங்க BSNL யின் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி காலிங், டேட்டா போன்ற பல நன்மை jio,Airtel கிட்டகூட நெருங்க முடியாது
BSNL-ன் ரூ.599 திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது 84 நாட்கள் நீண்ட வேலிடிட்டியை வழங்கும் . இது தவிர, இந்த 84 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை வழங்குகிறது . அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 252 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-ஐயும் வழங்குகிறது