லேண்ட்லைன் சலுகையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய சலுகைகள் வழங்கப்படுகிறது
BSNL நிறுவனம் தனது வொர்க்@ஹோம் பிராட்பேண்ட் சலுகை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி வழங்குகிறது. இதில் தினமும் 5 ஜிபி டேட்டா நொடிக்கு 10 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த சலுகை ஏப்ரல் 19 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பிஎஸ்என்எல் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வொர்க்@ஹோம் சலுகையை மே 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
லேண்ட்லைன் சலுகையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் மின்னஞ்சல் முகவரி இலவசமாகவும், 1 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித மாதாந்திர கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இத்துடன் இந்த சலுகையை பயன்படுத்த எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை.
பலன்களை பொருத்தவரை பிஎஸ்என்எல் வொர்க்@ஹோம் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டாவினை நொடிக்கு 10 எம்பி வேகத்தில் வழங்குகிறது. 5ஜிபி டேட்டாவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.