BSNL rs 51
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ, 51 யில் ஒரு மாத்ம வரையிலான வேலிடிட்டி வழங்கும் சூப்பர் திட்டம் கொண்டு வந்துள்ளது இவ்வளவு கம்மி விலையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா போன்ற நன்மைகள் தனியார் நிறுவனங்களான jio-Airtel கூட தர முடியாது மேலும் இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருக்கும் லிமிடெட் சலுகயாகும் மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,51 யில் வரும் கிறது இதன் நன்மையை பற்றி பேசினால், இந்தத் திட்டத்தின் கீழ், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது . கூடுதலாக, அவர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியைப் பெறுவார்கள். பயனர்கள் ஒரு தினமும் 100 SMS வசதியை பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டமானது 28 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது, அவர்களின் பெரும்பாலான டேட்டா, காலிங் மற்றும் மெசேஜிங் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
BSNLலின் அதிரடி ஆஃபர்.
— BSNL TamilNadu (@BSNL_TN) June 17, 2026
₹51 இலவச சிம்முடன அலைபேசி இணைப்பு.
இவை அனைத்தும் 30 June 26 வரை மட்டுமெ.
இன்றே இணையுங்கள் உங்கள் BSNLலில். pic.twitter.com/hDsgK9bZ3O
இந்தச் சலுகை நிரந்தரமானது அல்ல என்று பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது. நிறுவனத்தின்படி, ஸ்மார்ட் ஸ்டார்ட் திட்டம் மே 22, 2026 முதல் ஜூன் 30, 2026 வரை கிடைக்கும். இதன் பொருள், இந்தக் காலகட்டத்தில் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இதன் பலனைப் பெற முடியும். ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். மேலும் படிக்க: பிஎஸ்என்எல் VoWiFi அழைப்புச் சேவை என்றால் என்ன, அதை எப்படிச் செயல்படுத்துவது?
சமீபத்திய மாதங்களில், பிஎஸ்என்எல் தனது கஸ்டமர் மற்றும் நெட்வொர்க் அதிகரிக்கவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் தனது 4ஜி நெட்வொர்க் விரிவுபடுத்தியுள்ளதுடன், கூடுதல் மொபைல் டவர்களை நிறுவவும் தயாராகி வருகிறது. இது கவரேஜ் மற்றும் நெட்வொர்க் திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த விலை சலுகைகள், புதிய கஸ்டமர்களை ஈர்ப்பதற்கான ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.
இதையும் படிங்க பக்காவாக Jio அம்பானி இறக்கிய 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் திட்டம்
நீங்கள் ஒரு செகண்டரி சிம் கார்டைப் பெற, ஒரு புதிய நம்பரை வாங்க, அல்லது குறைந்த செலவில் மொபைல் சேவைகளை அனுபவிக்க விரும்பினால், BSNL-இன் ₹51 ஸ்மார்ட் ஸ்டார்ட் திட்டம் ஒரு குறைந்த விலைத் தேர்வாக இருக்கும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இதற்குத் தனியாக சிம் கார்டு கட்டணம் இல்லை, இது உங்கள் ஆரம்பச் செலவை குறைக்கிறது.