BSNL new year plan offer daily 3GB data unlimited calls for 365 days vs Jio Airtel
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) யின் இந்த புது வருஷத்துக்கு இந்த 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் 1 ஆண்டு வரை ரீச்சார்ஜ் செய்யும் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் அதாவது நீங்கள் இந்த புது வருஷத்துக்கு ரீச்சார்ஜ் செய்தால் இந்த ஆண்டு முழுவதும் வேலிடிட்டியை தரும் அதாவது அடுத்த ரீச்சார்ஜ் அடுத்த ஆண்டு ரீச்சார்ஜ் செய்தால் போதும் மேலும் இந்த திட்டத்தின் எத்தனை திட்டங்கள் இருக்கிறது மற்றும் அதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் ரூ.1198 திட்டம் இருப்பதிலே குறைந்த விலை திட்டங்களில் ஒன்றாகும் . இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் காலிங் நன்மையைப் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் கால்களை செய்யலாம். இது தவிர, இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தேசிய ரோமிங்கின் நன்மையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், கஸ்டமருக்கு தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும் 30 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் இதன் அடுத்த திட்டம் கஸ்டமர்களுக்கு இதேபோன்ற மற்றொரு திட்டத்தை வழங்குகிறது, இது 365 நாட்கள் வேலிடிட்டியாகும் . இந்த திட்டம் ரூ.1,498 க்கு வருகிறது மற்றும் 120 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் சலுகைகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 100 SMS மெசேஜ்களை அனுமதிக்கிறது.
BSNL-யின் ரூ.2,998 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 3GB டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 SMS-ஐயும் வழங்குகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காளிங்கை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த 365 நாள் திட்டத்தை மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது.