BSNL 5G
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL),முக்கியமான இடங்களான 5G சேவையை டெல்லி மற்றும் மும்பையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. டெல்லி மற்றும் மும்பை இரண்டுமே முக்கியமான நகரங்களும் மேலும் இதில் முக்கியமான சந்தைகளுக்கு முக்கிய பங்கை தருகிறது மேலும் ஏற்கனவே BSNL அதன் 5G சேவையை டெஸ்டிங் செய்து வருகிறது மற்றும் 5G NSA (non-standalone) இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
டெலிகாம் துறை (DoT) அதிகாரி ஒருவர் கூறுகையில், பிஎஸ்என்எல் விரைவில் டெல்லி மற்றும் மும்பையில் 5G சேவையை அறிமுகப்படுத்தும். அந்த அதிகாரி வழங்கிய காலக்கெடு டிசம்பர் 2025 ஆகும். அதாவது இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையின்படி, அந்த அதிகாரி, “அனைத்து உபகரணங்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக வேலை செய்கின்றன; எனவே, டிசம்பர் 2025 க்குள் இரு நகரங்களிலும் 5G சேவைகள் வணிக ரீதியாக தொடங்கப்படும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: BSNL யின் ஜாக் பாட் ஆபர் ஜியோவின் 2% கோல்ட் ஆபர் போல, ரீச்சர்ஜ் பிளானிலிருந்து 2% டிஸ்கவுண்ட்
பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட போட்டியாளர்கள் ஏற்கனவே இந்த நகரங்களில் 5G அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியாவும் சமீபத்தில் இந்தப் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. வோடபோன் ஐடியா சமீபத்தில் டேராடூனில் 5G ஐ அறிமுகப்படுத்தியது, கடந்த சில மாதங்களில் நாட்டின் பல பகுதிகளை 5G உடன் உள்ளடக்கியது. வோடபோன் ஐடியாவைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் 5G வெளியீடு தொடங்கியது. இப்போது அது இன்னும் பல நகரங்களை அடைந்துள்ளது.
BSNL அதன் 5G சேவையை தயார் படுத்தம் விதமாக சந்தையில் Q-5G சேவை என்ற பெயரில் என்ட்ரி கொடுத்துள்ளது, அதில் ‘Q’ யின் அர்த்தம் குவாண்டம் ஆகும் மேலும் இது விரைவில் நாடு முழுவதும் அதன் சேவையை விரிப்படுத்தும் மேலும் இது விரைவில் jio மற்றும் ஏர்டெல் உடன் போட்டியிட களத்தில் இறங்கும்.