BSNL யின் சூப்பர் புதிய ஆபர் 5000GB வரையிலான டேட்டா அதும் 200Mbps பாச்டஸ்ட் இன்டர்நெட்
BSNL 200 Mbps வேகத்திலான அதிவேக இன்டர்நெட் சேவையைப் பெறலாம்
பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் அறிவித்துள்ளது
இந்தத் திட்டத்தின் விலை ₹999 ஆகும்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் 200 Mbps வேகத்திலான அதிவேக இன்டர்நெட் சேவையைப் பெறலாம். குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட் , இலவச கால்கள் மற்றும் OTT சேவைகள் போன்ற வசதிகளை விரும்பும் பயனர்களுக்காகவே இந்த பாரத் சஞ்சார் நிகம் (BSNL) வைஃபை (WiFi) திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SurveyBSNL ரூ,999 திட்டம்
பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் பயனர்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் மூலம் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் விலை ₹999 ஆகும். இதன் நன்மைகளில், பயனர்கள் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது . மேலும், பயனர்களுக்கு 200Mbps வரையிலான இன்டர்நெட் ஸ்பீட் வழங்கப்படுகிறது. நிறுவனம் பயனர்களுக்கு 5000GB என்ற ஸ்டேண்டர்ட் பயன்பாட்டுக் பாலிசி (FUP) லிமிட்டை நிர்ணயித்துள்ளது.
Every stream deserves uninterrupted entertainment.
— BSNL India (@BSNLCorporate) August 2, 2026
From blockbuster movies and live matches to binge-worthy series, enjoy it all with BSNL FTTH.#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #999plan… pic.twitter.com/CM5Rinsknd
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு OTT ஆப்களுக்கான இலவச அக்சஸ் வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் ஜியோ ஹாட்ஸ்டார், ஹங்கமா OTT, ஜீ5, ஷெமரூ OTT மற்றும் சோனி LIV போன்ற OTT செயலிகளுக்கான அணுகலை வழங்குகிறது. இது BSNL வழங்கும் ஒரு மாதாந்திரத் திட்டமாகும், இது இன்டர்நெட் டேட்டா, OTT மற்றும் காலிங் பலன்களை வழங்குகிறது.
இதையும் படிங்க:
அரசு டெலிகாம் நிறுவனம் சமீபத்தில் தனது கோடிக்கணக்கான பயனர்களுக்காக ‘ஃப்ரீடம் ஆஃபர்’ (Freedom Offer) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃப்ரீடம் ஆஃபரின் கீழ், BSNL பயனர்கள் சோனி LIV, ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஆகிய மூன்று OTT செயலிகளையும் வெறும் ரூ.150-க்கு அணுகலாம். இந்தத் திட்டத்தின் செல்லுபடி காலம் 30 நாட்கள் ஆகும். பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் இந்தத் திட்டத்தை ஒரு பொழுதுபோக்கு பேக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகை, BSNL-இன் அனைத்து புதிய மற்றும் பழைய FTTH அதாவது பிராட்பேண்ட் பயனர்களுக்கானது. இந்த பேக்கின் விலை ரூ.199 ஆகும். ஃப்ரீடம் ஆஃபரின் கீழ், இந்த பேக் ரூ.150-க்குக் கிடைக்கும், அதாவது இதன் விலை ரூ.49 குறைக்கப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
