Airtel 1.5GB plan Tamil
மொபைல் ரீச்சார்ஜ் திட்டங்கள் தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில் இப்படி இருக்கும் நிலையில் Airtel அதன் கஸ்டமர்களுக்கு போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஒரே ஒரு ரீசார்ஜில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த இது உங்களை அனுமதிக்கிறது. சுவாரஸ்யமாக, இந்தத் திட்டம் கலிங் மற்றும் டேட்டா சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக பல பிரீமியம் OTT மற்றும் கிளவுட் சேவைகளையும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல்லின் ரூ,699 போஸ்ட்பெய்ட் திட்டம், அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது இரட்டை சிம் கார்டுகளை சப்போர்ட் செய்கிறது . அதாவது, ஒரே திட்டத்தில் நீங்கள் ஒரு ப்ரைமரி நம்பர் சேர்ப்பதுடன், பேமிலி மெம்பர் அல்லது பிற டிவாஸ்க்கான லிங்கை சேர்த்துக்கொள்ளலாம். காலிங் மற்றும் டேட்டா போன்ற அடிப்படை அம்சங்கள் இரண்டு சிம் கார்டுகளிலும் கிடைப்பதால், தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவை குறைகிறது.
இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது. இந்தத் திட்டம் அதிவேக டேட்டாவை வழங்குவதால், டேட்டா கஸ்டமர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்பவர்கள் அல்லது அடிக்கடி வீடியோக்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் வசதியாக இருக்கும்.
இந்த ஏர்டெல் திட்டம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு மட்டும் உட்பட்டதல்ல. இதில் அமேசான் பிரைமின் ஓராண்டு சந்தாவும் அடங்கும்.
மேலும், பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் அக்சஸ் கிடைக்கிறது. கிளவுட் ஸ்டோரேஜ் தேவைப்படுபவர்களுக்காக, 100GB கூகுள் ஒன் ஸ்டோரேஜும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், கன்டென்ட் உருவாக்குவார்கள் மற்றும் சோசியல் மீடியா பயனர்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இப்போதெல்லாம், பலர் ஒவ்வொரு மாதமும் பல்வேறு OTT தளங்கள், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் மொபைல் ரீசார்ஜ்களுக்காக கணிசமான தொகையைச் செலவிடுகிறார்கள். இந்த ஏர்டெல் திட்டம், ஒரே தொகுப்பில் அதிக அம்சங்களை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது. ஒரு குடும்பம் இரண்டு மொபைல் நம்பர்களை பயன்படுத்தினால், தனித்தனியாக ரீசார்ஜ் செய்வதை விட இந்தத் திட்டம் அதிக செலவு குறைந்ததாக அமையும். OTT மற்றும் கிளவுட் சேவைகளின் கூடுதல் நன்மை இதன் மதிப்பை மேலும் கூட்டுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பேக்குகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும் . எனவே, எந்தவொரு ரீசார்ஜ் பேக்கையும் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.