Airtel Adobe Express
Airtel அதன் கஸ்டமர்களுக்கு Adobe உடன் கைகோர்த்துள்ளது, இது அதன் கஸ்டமர்களுக்கு Adobe Express ப்ரீமியம் நன்மையை இலவசமாக வழங்குகிறது, இந்த ப்ரீமியம் திட்டத்தின் விலை ரூ,4000 ஆகும். ஆனால் இப்போது, ஏர்டெல்லின் டிஜிட்டல் நன்மைகளின் ஒரு பகுதியாக, மில்லியன் கணக்கான பயனர்கள் இந்த அம்சத்தை இலவசமாகப் பெறுகிறார்கள். இதை தவிர அர்கனவே ஏர்டெல் அதன் கஸ்டமர்களுக்கு Perplexity AI Pro அம்சத்தை 1 ஆண்டு வரை பெரும் வசதியை இலவசமாக வழங்குகிறது மேலும் இப்பொழுது ஏர்டெல்-அடோப் கூட்டாண்மை மூலம் கிடைக்கும் Adobe Express Premium இலவசம் என அறிவித்துள்ளது மற்றும் இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Adobe யின் ரூ,4,000 மதிப்புள்ள டிஜிட்டல் கிரியேட்டிவ் சேவையை எந்த ஒரு சார்ஜ்மின்றி இலவசமாக பெறலாம், மேலும் இந்த சேவையை ஏக்டிவ் செய்ய எந்த வித கார்டும் தேவை இல்லை இதை நீங்கள் Airtel Thanks App மூலம் எளிதாக செய்யலாம் மேலும் இந்த Adobe Express ஏக்டிவ் செய்ய 12 மாதங்கள் வரை பயன்படுத்தத் முடியும்.
சிக்கலான டிசைன் சாப்ட்வேர் கற்றுக்கொள்ளாமல் ப்ரொபெஷனல் டிசைன்களை உருவாக்க விரும்புவோருக்கென அடோப் எக்ஸ்பிரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் சில நிமிடங்களில் மிக சிறந்த சோசியல் மீடியா போஸ்ட்கள், வீடியோக்கள், போஸ்ட்டர், பலவற்றை உருவாக்க அடோப் எக்ஸ்பிரஸ் உதவுகிறது. முன்பே உருவாக்கப்பட்ட டெம்ப்ளேட்கள் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சாப்ட்வேரை கொண்டு, ஒரு நிபுணரின் வேலை போல உணரக்கூடிய ப்ரொபெஷனல் தோற்றமுடைய கண்டெண்டை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
இந்த விளம்பரம் மிகவும் முக்கியமானது. முன்பு, கன்டென்ட் உருவாக்கம் என்பது கிரியேட்டர்ஸ் மற்றும் டிசைன் நிறுவனங்களின் மட்டுமே களமாக இருந்தது. இருப்பினும், மாணவர்கள், ஃப்ரீலான்ஸர்கள், சிறு பிஸ்னஸ் மற்றும் கன்டென்ட் உருவாக்குநர்கள் இப்போது டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை நிலைநாட்டவும் பொதுமக்களைச் சென்றடையவும் கண்டெண்டை உருவாக்குகின்றனர். டிசைன் மற்றும் எடிட்டிங்கில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பயன்பாடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது, இதனால் அடோப் எக்ஸ்பிரஸ் சாதாரண பயனர்களுக்கு கண்டேன்ற்காக அதிகரித்து வரும் தேவையைத் தக்கவைக்க ஒரு யூசர் பிரெண்ட்லி டுலகஅமைகிறது.
இதையும் படிங்க:யாரும் தர முடியாத VI யின் உலகின் டாப் OTT ஷோ உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை