ஏர்டெல் ரூ.169 யில் 1GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங் வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு..!

HIGHLIGHTS

பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகை அறிவித்துள்ளது இதனுடன் இந்த புதிய திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1GB டேட்டா அன்லிமிட்டெட் நேஷனல் ரோமிங் தினமும் 100 லோக்கல் மற்றும் நேஷனல் SMS ஆகியவை வழங்கப்படுகிறது

ஏர்டெல்  ரூ.169 யில் 1GB  டேட்டா மற்றும்  அன்லிமிட்டட்  காலிங்  வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு..!

பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகை  அறிவித்துள்ளது இதனுடன் இந்த  புதிய திட்டத்தில் பயனர்களுக்கு  தினமும் 1GB  டேட்டா அன்லிமிட்டெட் நேஷனல் ரோமிங் தினமும் 100  லோக்கல் மற்றும் நேஷனல் SMS ஆகியவை வழங்கப்படுகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது, இதனுடன்  ஆகா மொத்தம்  பயனர்களுக்கு 1 மாதத்திற்கு 28GB  டேட்டா  கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஏர்டெல்  அறிவித்த இந்த புதிய சலுகையில் நாடு முழுக்க ஏர்டெல் பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தி வரும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் முன்னதாக  ரூ.169 இதே விலையில் வோடபோன் நிறுவனமும் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தது.

 

வோடபோன் வழங்கும் ரூ.169 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD அழைப்புகள், நேஷனல் ரோமிங், தினமும் 100SMS . ஆகியவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

இருப்பினும் தினசரி டேட்டா அளவை மீறினால் ஒரு எம்.பி. டேட்டாவிற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் வாய்ஸ் கால் செய்ய நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்த சலுகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 SMS  உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile