ஒரே ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே ஜாலியா இருக்கலாம் Airtel யின் பெஸ்ட் பிளான்

Updated on 22-Jan-2026

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ஒரே கனெக்ஷனில் முழு குடும்பமும் நன்மை பெரும் திட்டம் இருக்கிறது, வெறும் ரூ.999 ஆரம்ப விலையில் OTT சப்ஸ்க்ரிப்சன், டேட்டா மற்றும் காலிங் வசதியை வழங்கும் மூன்று மற்றும் சிம்கள் பேமிலி போஸ்ட்பெய்டு திட்டம் பார்க்கலாம் இந்த திட்டத்தில் ரூ.999 மற்றும் ரூ,1199 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,999 திட்டத்தின் நன்மை.

ஏர்டெல்லின் புதிய போஸ்ட்பெய்டு பேமிலி திட்டம் வெறும் ரூ,999க்கு வருகிறது. இது ஒரு முதன்மை நம்பர் மற்றும் இரண்டு ஆட்-ஆன்களை வழங்குகிறது. அதாவது மூன்று பேரும் ஒரே ரீசார்ஜில் செயலில் இருப்பார்கள். இதனுடன் இதன் நன்மைகள் பற்றி பேசினால், இந்த மூன்று நம்பர்களின் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. வேலையாக இருந்தாலும் சரி அல்லது நண்பர்களுடன் அரட்டையடிப்பதாக இருந்தாலும் சரி, நீங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் அதைச் செய்யலாம்.

இந்தத் திட்டம் மொத்தம் 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முதல் கஸ்டமருக்கு 90 ஜிபி மற்றும் மற்ற இரண்டு ஆட்-ஆன்களுக்கு தலா 30 ஜிபி. இதன் பொருள் அனைவருக்கும் கனெக்ஷன் பற்றாக்குறை இருக்காது.இந்தத் திட்டத்தில் அமேசான் பிரைமிற்கான ஆறு மாத அக்சஸ் , டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றிற்கான ஒரு வருட சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவை அடங்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் மற்றும் 100 ஜிபி கூகிள் ஒன் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டமானது ரூ,999 யில் 3 பேர் வரை பயன்படுத்தலாம் மேலும் நீங்கள் 4 பேர் வரை பயன்படுத்தும் திட்டத்தை பெற விரும்பினால், ரூ,1199 திட்டத்தை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:பல்லே பல்லே Airtel யின் பக்கவான ஆபர் வெறும் ரூ,40க்குள் வரும் திட்டத்தில் 9GB டேட்டா

Airtel ரூ,1199 திட்டத்தின் நன்மை.

ஏர்டெல் இரண்டு போஸ்ட்பெய்டு பேமிலி ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. சிங்கிள் விலை ரூ.1199, இதன் மூலம் மொத்தம் நான்கு பேர் இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் நன்மைகளைப் பெற முடியும்.3 கனேக்ஷங்களை சேர்ப்பதற்கான ஏர்டெல்லின் குறைந்த விலை போஸ்ட் பெய்டு பேமிலி ரீசார்ஜ் திட்டம் ரூ,1199க்கு வருகிறது. முதல் கனெக்ஷனை தவிர, இது 3 கனேக்ஷங்களை சேர்க்க அனுமதிக்கிறது. மேலும் இதில் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் மொத்தம் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

முதன்மை கனெக்ஷனுக்கு 100 ஜிபி மற்றும் அனைத்து கூடுதல் கனேக்ஷங்களுக்கு 30 ஜிபி டேட்டாவும் இதில் அடங்கும். கூடுதல் நன்மைகளாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், பிளே விங்க் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இலவச சப்ஸ்க்ரிப்ஷன் பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :