டார்க் வெப் தளத்தில் சுமார் பத்து கோடி பயனர்களின் மிகமுக்கிய விவரங்கள் வெளியாகி இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். இதில் பயனர்களின் பெயர், போன் நம்பர், email முகவரி, முதல் மற்றும் கடைசி நான்கு இலக்க கார்டு எண்கள் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அமேசான், மேக்மைட்ரிப் மற்றும் ஸ்விகி போன்ற நிறுவனங்களின் பணப்பரிமாற்ற முறைகளை கையாளும் ஜஸ்பே எனும் முகமைக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் அம்பலமாதாக தெரிவித்து இருந்தது.
Survey
✅ Thank you for completing the survey!
மார்ச் 2017 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பணப்பரிமாற்றங்களின் போது இந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதில் பல்வேறு இந்தியர்களின் கார்டு எக்ஸ்பைரி தேதி, கஸ்டமர் ஐடிி மற்றும் கார்டு எண்களின் முதல் மற்றும் கடைசி நான்கு இலக்கங்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், சரியான பரிமாற்ற விவரங்கள் தெரியவில்லை.
இணையத்தில் வெளியாகி இருக்கும் அந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு இருந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இவற்றை விற்கும் ஹேக்கர் டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிட்காயின்களை பரிமாற்றத்திற்கு கேட்பதாக அவர் மேலும் தெரிவித்தார்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile