இந்த தீபாவளியை முன்னிட்டு ஒன்னுக்கு ஒன்னு போட்டி போட்டு பல திரைப்படங்கள் இங்கு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில் பல அசத்தலான தமிழ் திரைப்படங்களின் முழுமையான பட்டியலில் காலங்களில் அவள் வசந்தம். போன்ற படங்கள் அடங்கும்.
Release Date : 25 Oct 2022
Cast : அக்ஷய் குமார், சத்யா தேவ்
Director : அபிஷேக் ஷர்மா
ராமர் பாலம் (ராம் சேது) – இயக்குனர் அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார், சத்யா தேவ், நாசர் என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரோடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்…
Release Date : 21 Oct 2022
Cast : சிவகார்த்திகேயன், சத்யராஜ்
Director : அனுதீப் கே.வி
ப்ரின்ஸ் இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சோனாலி நரங், சுரேஷ் பாபு மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை – காதல் என தமிழ் ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு குடும்பப்படமாக உருவாகியுள்ள ப்ரின்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்ய,…
Release Date : 21 Oct 2022
Cast : கார்த்தி, ராசி கன்னா
Director : மித்ரன் பி எஸ்(இயக்குனர்)
சர்தார் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் த்ரில்லர் & அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தனது 'ப்ரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங்…
Release Date : 20 Oct 2022
Cast : டுவைன் ஜான்சன், ஆல்டிஸ் ஹாட்ஜ்
Director : ஜாமே காலெட்-செர்ரா
பிளாக் ஆடம் இயக்குனர் ஜாமே காலெட்-செர்ரா இயக்கத்தில் டுவெயின் ஜான்சன், நோவா சென்டினோ, ஆல்டிஸ் ஹாட்ஜ் என பலர் இணைந்து நடித்திருக்கும் திரில்லர் மீநாயகன் திரைப்படம். இப்படத்தினை டுவெயின் ஜான்சன், டேனி கார்சியா, ஹிராம் கார்சியா, பியூ ஃப்ளின் இணைந்து தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனம் இபபடத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.
பிளாக் ஆடம் – டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மீநாயகன் திரைப்படம். இப்படம் உலகமெங்கும் அக்டோபர் 21ல் வெளியாக உள்ளது.
Release Date : 07 Oct 2022
Cast : மெட்ரோ சிரிஷ், மிருதுளா முரளி
Director : ரமேஷ் பாரதி
பிஸ்தா இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சதீஷ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தரன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படமானது இப்படத்தின் இசையமைப்பாளர் தரன்-னின் இசையில் உருவாகும் 25-வது திரைப்படமாகும்.
Cast : பிரகாஷ் ராஜ், விக்ரம்
Director : மணி ரத்னம்
Released Date : 30 Sep 2022
பொன்னியின் செல்வன் (PS 1) (முதல் பாகம்) – இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள தமிழர்களின் வரலாற்று திரைப்படம். பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுத்தாளர் கல்கி எழுதியுள்ளார், கல்கி எழுதிய இந்த கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்று படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய முன்னணி தயாரிப்பாளரான சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரோடக்ஷ்ன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.