MG 4 எலெக்ட்ரிக் ஹேச்பேக் அறிமுகம், 450 கிமீ வழங்கும்.

HIGHLIGHTS

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக், எம்ஜி 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய எம்ஜி 4 மாடல் கியா நிரோ EV மாடலுக்கும் போட்டியாக அமைகிறது

புதிய எம்ஜி 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும்

MG 4 எலெக்ட்ரிக் ஹேச்பேக் அறிமுகம், 450 கிமீ  வழங்கும்.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக், எம்ஜி 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐடி.3 மாடலுக்கு போட்டியாக புது எம்ஜி4 அறிமுகமாகி இருக்கிறது. சில நாடுகளில் புதிய எம்ஜி 4 மாடல் கியா நிரோ EV மாடலுக்கும் போட்டியாக அமைகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய எம்ஜி 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும். இத்துடன் அதிக இடவசதி கொண்ட இண்டீரியர் மற்றும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் எம்ஜி 4 மாடல் எம்ஜி முலன் எனும் பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஹேச்பேக் மாடல் எம்ஜி மோட்டார் தாய் நிறுவனமான SAIC-இன் மாட்யுலர் ஸ்கேலபில் பிளாட்பார்ம் (MSP) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் எம்ஜி 4 மாடலில் 167 ஹெச்.பி. பவர், 201 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் ரியர் வீல் டிரைவ் பவர்டிரெயின்கள் வழங்கப்பட இருக்கிறது. இதே காரின் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் யூனிட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் 167 ஹெச்.பி. பவர் கொண்ட வேரியண்டில் 51 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது.

இதே பிளாட்பார்மில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால மாடல்களும் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த பிளாட்பார்மில் காரின் வீல்பேஸ் 2650mm இல் இருந்து அதிகபட்சம் 3100mm வரையில் வழங்கப்படுகிறது. மேலும் பேட்டரியை பொருத்தவரை 40 கிலோவாட் ஹவர்-இல் இருந்து அதிகபட்சம் 150 கிலோவாட் ஹவர் வரையிலான திறன் வழங்கப்படலாம். இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பேக் பேட்டரி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile