சமூக வலைதளம், தகவல் பரிமாற்றம் மற்றும் டேட்டிங் செயலிகளை குறிவைக்கும் புதிய ஆண்ட்ராய்டு மால்வேரை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கின்றனர்.
Survey
✅ Thank you for completing the survey!
பிளாக்ராக் என அழைக்கப்படும் இந்த மால்வேர் பேங்கிங் ட்ரோஜன் ஆகும். பேங்கிங் ட்ரோஜன் என்றாலும் இது பேங்கிங் அல்லாத செயலிகளையும் குறிவைக்கிறது. முதலில் கூகுள் அப்டேட் போன்று இயங்கி தேவையான அனுமதி பெறப்பட்டதும், ஆப் டிராயரில் இருந்து ஐகானை மறைய செய்து தகவல் சேகரிக்கும் பணிகளை துவங்குகிறது.
வழக்கமான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் செயலிகளை போன்றே பிளாக்ராக் மால்வேர் இருக்கிறது. எனினும், இது 337 செயலிகளை குறிவைத்து செயல்படுகிறது. இது வழக்கமான மால்வேர்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நெதர்லாந்தை சேர்ந்த திரெட்ஃபேப்ரிக் எனும் சைபர் செக்யூரிட்டி ஆய்வு நிறுவனம் மே மாத வாக்கில் பிளாக்ராக் மால்வேர் விவரங்களை கண்டறிந்தது. இது பயனர் குறியீடு, கடவுச்சொல் மற்றும் கிரெட் கார்டு விவரங்களை திருடும் திறன் கொண்டிருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile