Netflix யில் புதிய அம்சம் மூவி-சீரிஸ் மட்டுமில்லாமல் இனி மொபைல் கேம் விளையாட முடியும்

HIGHLIGHTS

வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் பயனர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது

நெட்ஃபிக்ஸ் தற்போது வெப் சீரிஸ் , திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்குகிறது.

நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவைக்கான சந்தா, பயனர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்திலேயே சேர்க்கப்பட்டுவிடும்

வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் பயனர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. நிறுவனம் கூறுகையில், இப்போது நெட்ஃபிக்ஸ் கேமிங் துறையில் நுழைய முடிவு செய்கிறது. நெட்ஃபிக்ஸ் தற்போது வெப் சீரிஸ் , திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்குகிறது. நெட்ஃபிக்ஸ் முன்னாள் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் மற்றும் பேஸ்புக் நிர்வாகி மைக் வெர்டுவை அதன் விளையாட்டு மேம்பாட்டு துணைத் தலைவராக நியமித்ததாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் முன்பு பேஸ்புக்கின் துணைத் தலைவராக இருந்தார், ஓக்குலஸ் மெய்நிகர்-ரியாலிட்டி ஹெட்செட்டில் விளையாட்டுகள் மற்றும் பிற உள்ளடக்கங்களுக்கான டெவலப்பர்களுடன் பணியாற்றினார்

நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவைக்கான சந்தா, பயனர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்திலேயே சேர்க்கப்பட்டுவிடும். இதனால் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம். 

இந்தியாவில் முன்னணி ஓ.டி.டி. தளங்களில் ஒன்றாக இருக்கும் நெட்ப்ளிக்ஸ் விரைவில் கேமிங் சந்தையில் களமிறங்க இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கை வெளியீட்டின் போது நெட்ப்ளிக்ஸ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. 

வருவாய் அறிக்கையின்படி நெட்ப்ளிப்க்ஸ் நிறுவனம் 7.3 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகம் ஆகும். தற்போது நெட்ப்ளிக்ஸ் சேவையை 20.9 கோடி பயனர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இது சரசாரி கட்டண வருவாயில் 11 சதவீதமும், ஒரு சந்தாதாரரின் வருவாயில் 8 சதவீதமும் அதிகம் ஆகும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :