Xiaomi Redmi S2 ஸ்மார்ட்போன் அதன் போட்டோ மற்றும் விவரக்குறிப்பு பற்றிய தகவல் லீக் ஆகியுள்ளது

Xiaomi Redmi S2 ஸ்மார்ட்போன் அதன் போட்டோ  மற்றும் விவரக்குறிப்பு பற்றிய தகவல் லீக் ஆகியுள்ளது
HIGHLIGHTS

Xiaomi Redmi S2 சாதனம் லீக் ஆனா போட்டோ பார்த்தல் இந்த ஸ்மார்ட்போனில் ரோஸ் கோல்ட் வகையை தவிர பிங்காரப்ரின்ட் சென்சார் மற்றும் டூயல் வரடிகள் கேமரா உடன் இருக்கிறது

சீனாவின் TENAA வெப்சைட்டில் சில தினங்களுக்கு முன் காணப்பட்ட சியோமி எஸ்2 ஸ்மார்ட்போன் வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. புதிய வீடியோவில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளன. 

அதன் படி சியோமி எஸ்2 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி பிரைமரி சென்சார், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது.

அழகிய செல்ஃபி எடுக்க 16 எம்பி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இங்குதளம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி எஸ்2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி

புதிய சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் பிளாக், ரோஸ் கோல்டு, வைட், புளு, ரெட், பின்க், கிரே மற்றும் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo