சியோமியின் Redmi Note 9 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் பெபிள் கிரே, ஆர்க்டிக் வைட் மற்றும் அக்வா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11999 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
– 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
– கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி
– 5020 எம்ஏஹெச் பேட்டரி
– 22.5 வாட் சார்ஜர்
– 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் HD பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்வழங்கப்பட்டுள்ளது
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.