64MP கேமராவுடன் அறிமுகமானது xiaomi யின் Mi 11 Lite ஸ்மார்ட்போன்.

Updated on 23-Jun-2021
HIGHLIGHTS

Xiaomi Mi 11 Lite இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Mi 11 Lite ஆரம்ப விலை ரூ .21,999 ஆகும்.

மி 11 வரிசையில் நான்காவது போன் Mi 11 Lite ஆகும்.

Xiaomi Mi 11 Lite இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சியோமியின் மி 11 வரிசையில் நான்காவது போன் Mi 11 Lite ஆகும். முன்னதாக, Mi 11 Ultra, Mi 11X மற்றும்  Mi 11X Pro புரோ போன்கள் இந்த சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மி 11 லைட் ஒரு மெலிதான மற்றும் லைட் ஸ்மார்ட்போன் ஆகும், இது 6.8mm டைமன்ஷன் மற்றும் 157 கிராம் எடையுள்ளதாகும்.

சியோமி எம்ஐ 11 லைட் அம்சங்கள்

– 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ 
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 4250 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

இதில் 6.55 இன்ச் AMOLED டாட் டிஸ்ப்ளே, HDR10, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய எம்ஐ 11 லைட் மாடல் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் வசதி கொண்டிருக்கிறது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

சியோமி எம்ஐ 11 லைட் விலை தகவல்.

சியோமி எம்ஐ 11 லைட் மாடல் டஸ்கேனி கோரல், ஜாஸ் புளூ மற்றும் வினைல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :