Xiaomi 12 Ultra அறிமுக தேதி லீக் ஆனது ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசசர் இடம்பெற்றிருக்கும்

HIGHLIGHTS

சியோமி தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருகிறது

சியோமி 12 அல்ட்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் வெளியீட்டு விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது

ஜூலை மாதம் 5-ந் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Xiaomi 12 Ultra அறிமுக தேதி லீக் ஆனது ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசசர் இடம்பெற்றிருக்கும்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சியோமி தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருகிறது. சியோமி 12 அல்ட்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் வெளியீட்டு விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசசர் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உடன் வரும் எனவும் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இதன் பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பின்னரே உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. வருகிற ஜூன் 28-ந் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவுகூர, Xiaomi இன் CEO, Lei Jun, வரவிருக்கும் Xiaomi ஃபிளாக்ஷிப் (Xiaomi 12 Ultra) செயல்திறன் மற்றும் ஆற்றல் நுகர்வில் ஒரு பெரிய முன்னேற்றத்தை வழங்கும் மற்றும் Snapdragon 8+ Gen 1 SoC இலிருந்து பெறும் என்று கிண்டல் செய்தார். வரவிருக்கும் Xiaomi 12 அல்ட்ராவிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile