சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் "மிட் ரேன்ஜ் பிரீமியம்" மாடல்களாக Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்கள் நேற்று நடந்த ஒரு உலகளாவிய நிகழ்வில் (செப்.15) அறிமுகப்படுத்தப்பட்டன.
இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ்-சின்க் ஆமோலெட் பிளாட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி 11டி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், சியோமி 11டி ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ். உள்ளது. இரு மாடல்களுக்கும் மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.
சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்களில் 108 எம்பி வைடு ஆங்கில், 8 எம்பி 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. சியோமி 11டி ப்ரோ மாடல் 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்கள் மீடியோரைட் கிரே, மூன்லைட் வைட் மற்றும் செலஸ்டியல் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. சியோமி 11டி 8 ஜிபி+128 ஜிபி விலை 499 யூரோக்கள் என்றும் சியோமி 11டி ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை 649 யூரோக்கள் என துவங்குகிறது.
சியோமி 11 டி – 8 ஜிபி ரேம் + 128 ஜிபி – இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.43,300
சியோமி 11 டி – 8 ஜிபி ரேம் + 256 ஜிபி – இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.47,700
சியோமி 11 டி ப்ரோ – 8 ஜிபி ரேம் + 128 ஜிபி – இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.56,400
சியோமி 11 டி ப்ரோ – 8 ஜிபி ரேம் + 256 ஜிபி – இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.60,700
சியோமி 11 டி ப்ரோ – 12 ஜிபி ரேம் + 256 ஜிபி – இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.65,000
சியோமி 11 டி மற்றும் சியோமி 11 டி ப்ரோ ஆகிய இரண்டுமே Celestial Blue Meteorite Gray மற்றும் Moonlight White வண்ண விருப்பங்களில் வருகின்றன மற்றும் இது ஆரம்பத்தில் ஐரோப்பாவில் வாங்க கிடைக்கும்.
இந்த போன்கள் இரண்டு வருட வாரண்டியுடன், மூன்று ஆண்ட்ராய்டு சிஸ்டம் மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெறும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Xiaomi 11T, Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்களின் விற்பனை பற்றிய சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த இரண்டு புதிய சியோமி போன்களின் இந்திய அறிமுகமும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை