108MP கேமராவுடன் Xiaomi 11t மற்றும் Xiaomi 11t Pro அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 16 Sep 2021
HIGHLIGHTS
  • Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்கள் நேற்று நடந்த ஒரு உலகளாவிய நிகழ்வில் (செப்.15) அறிமுகப்படுத்தப்பட்டன.

  • சியோமி 11டி ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது

  • சியோமி 11டி ப்ரோ மாடல் 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

108MP கேமராவுடன் Xiaomi 11t மற்றும் Xiaomi 11t Pro  அறிமுகம்.
108MP கேமராவுடன் Xiaomi 11t மற்றும் Xiaomi 11t Pro அறிமுகம்.

சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் "மிட் ரேன்ஜ் பிரீமியம்" மாடல்களாக Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்கள் நேற்று நடந்த ஒரு உலகளாவிய நிகழ்வில் (செப்.15) அறிமுகப்படுத்தப்பட்டன.

Xiaomi 11t மற்றும் Xiaomi 11t Pro சிறப்பம்சம்.

இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ்-சின்க் ஆமோலெட் பிளாட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
 
சியோமி 11டி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், சியோமி 11டி ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ். உள்ளது. இரு மாடல்களுக்கும் மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

 சியோமி 11டி ப்ரோ சிறப்பம்சம் 

சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்களில் 108 எம்பி வைடு ஆங்கில், 8 எம்பி 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. சியோமி 11டி ப்ரோ மாடல் 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை, விற்பனை:

சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்கள் மீடியோரைட் கிரே, மூன்லைட் வைட் மற்றும் செலஸ்டியல் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. சியோமி 11டி 8 ஜிபி+128 ஜிபி விலை 499 யூரோக்கள் என்றும் சியோமி 11டி ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை 649 யூரோக்கள் என துவங்குகிறது.

சியோமி 11 டி - 8 ஜிபி ரேம் + 128 ஜிபி - இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.43,300
சியோமி 11 டி - 8 ஜிபி ரேம் + 256 ஜிபி - இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.47,700

சியோமி 11 டி ப்ரோ - 8 ஜிபி ரேம் + 128 ஜிபி - இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.56,400
சியோமி 11 டி ப்ரோ - 8 ஜிபி ரேம் + 256 ஜிபி - இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.60,700
சியோமி 11 டி ப்ரோ - 12 ஜிபி ரேம் + 256 ஜிபி - இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.65,000

சியோமி 11 டி மற்றும் சியோமி 11 டி ப்ரோ ஆகிய இரண்டுமே Celestial Blue Meteorite Gray மற்றும் Moonlight White வண்ண விருப்பங்களில் வருகின்றன மற்றும் இது ஆரம்பத்தில் ஐரோப்பாவில் வாங்க கிடைக்கும்.

இந்த போன்கள் இரண்டு வருட வாரண்டியுடன், மூன்று ஆண்ட்ராய்டு சிஸ்டம் மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெறும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Xiaomi 11T, Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்களின் விற்பனை பற்றிய சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த இரண்டு புதிய சியோமி போன்களின் இந்திய அறிமுகமும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Xiaomi 11t and Xiaomi 11t Pro Launched know here full details
Tags:
xiaomi 11t sale date xiaomi 11t pro sale xiaomi 11t pro price xiaomi 11t price xiaomi 11 lite 5g ne sale xiaomi 11 lite 5g ne price
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 6799 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 11999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 14999 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
₹ 10999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status