பட்ஜெட் விலையில் டூயல் கேமரா அம்சத்துடன் அறிமுகமானது Vivo Y93 ஸ்மார்ட்போன்..!

HIGHLIGHTS

இந்தியாவில் விவோ வை93 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கும்

பட்ஜெட் விலையில்  டூயல் கேமரா  அம்சத்துடன் அறிமுகமானது Vivo Y93 ஸ்மார்ட்போன்..!

Vivo  நிறுவனம் Y சீரிஸ் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த Y93 ஸ்மார்ட்போனில்  மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போனில் சீனா சந்தையில் அறிமுகம் செய்யும்போது ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் உடன் வழங்கப்பட்டது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo  Y93  ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் 720×1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டோரேஜை கூடுதலாக அதிகரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விவோ Y93 சிறப்பம்சங்கள்:

– 6.22 இன்ச் 720×1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
– மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் பிராசஸர்
– 4 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. ஸ்டோரேஜ் 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்.பி. பிரைமரி கேமரா
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, PDAF, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஃபேஸ் அன்லாக்
– 4030 Mah . பேட்டரி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி. வசதி
– ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் ஃபன்டச் OS 4.5

போட்டோக்கள் எடுக்க விவோ Y93 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. செகண்டரி பிரைமரி கேமரா, PDAF, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக்,AI  பியூட்டிஃபிகேஷன் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலை மற்றும் விற்பனை 
இந்தியாவில் விவோ வை93 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கும் விவோ Y93 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile